முதல் நாளே ‘லால் சலாம்’ படத்திற்கு வந்த சோதனை... ரசிகர்கள் வேதனை!

லால் சலாம்
லால் சலாம்

படம் ரிலீஸான முதல் நாளே 'லால் சலாம்’ படத்திற்கு கூட்டமில்லை என ரசிகர்கள் ஸ்கிரீன் ஷாட் பகிர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர்.

’லால் சலாம்’ படப்பிடிப்புத் தளம்...
’லால் சலாம்’ படப்பிடிப்புத் தளம்...

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ இன்று ரிலீஸாகி இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. ஆனால், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்த இந்தப் படத்தைப் பார்க்க முதல் நாளிலேயே பெரிதாக கூட்டமில்லை என்ற விஷயம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி போன்ற மாஸ் ஹீரோ சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் படத்தின் முதல் நாள் காட்சிக்கே அதிகம் யாரும் ஆர்வம் காட்டவில்லை என ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இணையத்தில் வலம் வரும் ஸ்கிரீன் ஷாட்...
இணையத்தில் வலம் வரும் ஸ்கிரீன் ஷாட்...

குறிப்பாக, திரையரங்குகளில் ‘லால் சலாம்’ படத்திற்காக டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் தளத்திற்குச் சென்று அதன் ஸ்கிரீன் ஷாட்களை வைத்தே ரசிகர்கள் இப்படி கூறி வருகின்றனர்.

இருப்பினும் வார இறுதி நாட்களில் இந்த நிலை மாறும் என ஒரு சிலர் ஆர்தல் வார்த்தைகளைக் கூறி வருகின்றனர். ’3’, ‘வை ராஜா வை’ போன்ற படங்களை அடுத்து எட்டு வருடம் கழித்து ஐஸ்வர்யா ‘லால் சலாம்’ படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!

பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in