'முத்து' படத்தில் ஊர்வசியை ரிஜெக்ட் செய்த ரஜினி... ரமேஷ் கண்ணா சொன்ன ஷாக் தகவல்!

ரமேஷ் கண்ணா
ரமேஷ் கண்ணா

'முத்து’ படத்தில் நடிகை ஊர்வசி நடிக்க முதலில் கமிட் செய்யப்பட்டார். ஆனால், அவரை ரஜினிகாந்த் மறுத்து ரிஜெக்ட் செய்திருக்கிறார் என நடிகர் ரமேஷ் கண்ணா ‘காமதேனு’ டிஜிட்டலுக்குக் கொடுத்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

நடிகர் ரமேஷ் கண்ணா
நடிகர் ரமேஷ் கண்ணா

நடிகர் ரஜினிகாந்தின் சினிமா கரியரில் ‘முத்து’ படத்திற்கு எப்போதும் ஸ்பெஷல் இடம் உண்டு. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பட்டித்தொட்டி எங்கும் இருக்கும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானது. இதில் ரஜினியின் அரசியல் வசனங்கள், நகைச்சுவை குறிப்பாக ரஜினி-மீனா ஜோடி போன்ற விஷயங்கள் ரசிக்கக் கூடியதாக இருந்தது. இந்தப் படத்தில் ஜமீன்தாரராக சரத்பாபு நடித்திருப்பார். அவரின் முறைப்பெண்ணாக சுபஸ்ரீ நடித்திருப்பார். சிறு கதாபாத்திரம் என்றாலும் இன்று வரை அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நியாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

நடிகை சுபஸ்ரீ
நடிகை சுபஸ்ரீ

இவருக்கு படத்தில் ‘கொக்கு சைவ கொக்கு’ என்ற ஒரு பாடலும் அமைந்திருக்கும். இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் ஊர்வசிதானாம். ஆனால், ஊர்வசி வேண்டாம் என்று ரஜினி ரிஜெக்ட் செய்திருக்கிறார். இந்தத் தகவலை நடிகர், இயக்குநர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்ட ரமேஷ் கண்ணா காமதேனு டிஜிட்டலுக்குக் கொடுத்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

’முத்து’ படத்தில் ரமேஷ் கண்ணாவும் ரஜினியுடன் நடித்திருப்பார். இந்த சம்பவம் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, “சுபஸ்ரீ கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஊர்வசியைத் தான் ஒப்பந்தம் செய்தார்கள். ரஜினி படம் என்றதும் ஊர்வசியும் ஒத்துக் கொண்டார். ஆனால், படத்தில் சுபஸ்ரீயின் கதாபாத்திரம் நல்ல கதாபாத்திரம்தான் என்றாலும் சிறியது. அப்போது ஊர்வசி சினிமாவில் பெரிய நடிகை. அப்படியானவர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் சரியாக இருக்காது என்று ரஜினி நினைத்தார். அதனால், தானாகவே முன்வந்து, ‘நான்தான் நீங்கள் படத்தில் வேண்டாம் என்று சொன்னேன்’ என ஊர்வசிக்கு நிலையை விளக்கி சொன்னார். ஊர்வசியும் அதைப் புரிந்து கொண்டார்” என்றார்.

இதுமட்டுமல்லாது ரஜினி-கமலுடனான நட்பு, அவர்களுடன் ‘அவ்வை சண்முகி’, ‘கோச்சடையான்’, ‘படையப்பா’ போன்ற கிளாசிக் ஹிட் படங்களில் நடித்த அனுபவம், விஜயின் அரசியல் எனப் பல விஷயங்களை இந்த நேர்காணலில் ரமேஷ்கண்ணா பகிர்ந்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

2024ல் சக்தி வாய்ந்த 100 இந்தியர்கள்... மோடி முதலிடம்... அமித்ஷா இரண்டாமிடம்... அசரடித்த பட்டியல்!

மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரில் காதலியுடன் திருமணம்... வைரலாகும் வீடியோ!

சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்: செல்வப்பெருந்தகை தடாலடி பேட்டி!

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ எங்களிடம் இருக்கு... பணம் கேட்டு மிரட்டிய பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது!

மேட்ரிமோனி இணையதளங்கள் மூலம் வலை; கஸ்டம்ஸ் ஆபீசர் என பொய்... 259 பெண்களை ஏமாற்றிய பலே மோசடி மன்னன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in