ரசிகர்கள் வைத்த கோரிக்கை... விடாப்பிடியாக மறுத்த ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்
Updated on
1 min read

ரசிகர்களின் கோரிக்கையை நடிகர் ராகவா லாரன்ஸ் விடாப்பிடியாக மறுத்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் 'ஜிகர்தண்டா- டபுள் எக்ஸ்' உருவாகியுள்ளது. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது, ”’ஜிகர்தண்டா’ படத்தின் முதல் பாகத்தில் அசால்ட் சேது கதாபாத்திரம் நான்தான் பண்ணவேண்டியது. இந்த படத்தை தியேட்டர்ல பார்த்ததும் நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டோம்ன்னு வருத்தப்பட்டேன். இருந்தாலும் பரவாயில்லை. அந்த 20 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை மிஸ் பண்ணதுனாலதான் இப்போ 100 கோடி ரூபாய் பட்ஜெட்ல ஒரு படம் கிடைச்சிருக்கு.

நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் 'ஜிகர்தண்டா- டபுள் எக்ஸ்' படத்தில்...

எஸ். ஜே சூர்யா சார் சிவகார்த்திகேயன், விஷால்கூட நடிச்சு ஹிட் கொடுத்துட்டாரு. இப்போ என்கூட ஹிட் கொடுக்க போறாரு. என்னோட ரசிகர்கள் எல்லோரும் 'எங்களை இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு எல்லாம் கூப்பிட மாட்டேங்குறீங்க'ன்னு கேக்கறாங்க. நான் உங்களைக் கூப்பிடமாட்டேன். இப்போ நீங்க ஒரு விழாவுக்குத் தயாராகி வந்தா எவ்வளவு செலவு ஆகும்ன்னு எனக்கு தெரியும். நீங்க படத்தை தியேட்டரில் பார்த்து மட்டும் ஆதரவு கொடுங்க” எனப் பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in