அன்று 4 வயது சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி... விருட்சமாக வளர்ந்த விதை!

நடிகர் ராகவா லாரன்ஸ்- சிவசக்தி
நடிகர் ராகவா லாரன்ஸ்- சிவசக்தி

நான்கு வயது சிறுவனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் படிப்பிற்காக உதவி செய்துள்ளார். சிவசக்தி என்ற அந்தச் சிறுவன் தற்போது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் இப்போது வேலை பார்க்கிறார். மேலும், சிவசக்தி போலீஸ் ஆக வேண்டும் என்ற தனது கனவை நோக்கி செயல்பட்டு வருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது, நடனத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தனது நடனப் பள்ளியில் இடம் கொடுப்பது என பல நல்ல காரியங்களை செய்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். அப்படி தன்னிடம் கல்வி உதவிக்காக நான்கு வயதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வந்த சிறுவன் சிவசக்தி, தன் குடும்ப சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, பட்டப்படிப்பு படித்து முடித்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதை பெருமையுடன் பகிர்ந்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

மேலும், சப் இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என்ற கனவையும் சிவசக்தி சீக்கிரம் நிறைவேற்றி விடுவார் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லாரன்ஸ் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “சிவசக்திக்கு நான்கு வயது இருக்கும்போது அவரது அம்மா என்னிடம் உதவி கேட்டு வந்தார். அவரது அப்பா குடும்பத்தை விட்டு விலகிய நிலையில், சிவசக்தியையும் அவனது தங்கச்சியையும் அம்மாதான் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. என்னுடைய உதவியோடு சிவசக்தி நன்றாகப் படித்தார். பி.எஸ்சி., கணிதம் முடித்து இப்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார்.

சப் இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என்ற கனவையும் சீக்கிரம் நிறைவேற்றி விடுவார். அவரிடம் நான் வேண்டுவது ஒன்றுதான், அவர் இன்னும் நல்ல நிலைக்கு வரும்போது பல குழந்தைகளுக்கு இதுபோல உதவ வேண்டும் என்பதுதான். ஏனெனில், கல்வியே உலகை மாற்றும் ஆயுதம். சேவையே கடவுள்!” எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    


வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in