மோசமான குடிப்பழக்கம்... அட்வைஸ் மழை பொழிந்த நடிகர் பிரசாந்த்!

பிரசாந்த்
பிரசாந்த்

நம் உடலில் மிக முக்கியமான உறுப்பு கல்லீரல். ஆனால், அதைத்தான் நாம் மோசம் செய்து கொண்டிருக்கிறோம் என நடிகர் பிரஷாந்த் பேசியுள்ளார். ஆனால், மோசமான குடி, உடற்பயிற்சி இல்லாமை போன்றவற்றால் அதை நாம் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் எனப் பேசியுள்ளார் பிரசாந்த்.

நடிகர் பிரசாந்த்
நடிகர் பிரசாந்த்

உடல்நலன் குறித்து மருத்துவர்களும் அனுபவசாலிகளும் சொல்வதை விட பிரபலமானவர்கள் சொன்னால் பொதுமக்கள் மத்தியில் இன்னும் அதிகம் சென்றடையும். அப்படித்தான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கல்லீரல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டார். இதில் கல்லீரல் பாதுகாப்பு குறித்து அவர் பேசியிருக்கும் விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

அவர் பேசியிருப்பதாவது, “நம் உடலில் கல்லீரல்தான் முக்கிய உறுப்பு. அது நன்றாக இருந்தால்தான் மொத்த உடலும் நன்றாக இருக்கும். இது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. முதலில் நம் உணவு முறையில் ஒழுக்கத்தைக் கொண்டு வர வேண்டும். எதையாவது இஷ்டத்திற்கு சாப்பிடுகிறோம், மது அருந்துகிறோம். இது முற்றிலும் தவறானது.

நடிகர் பிரஷாந்த்
நடிகர் பிரஷாந்த்

இதனால் கல்லீரல் கடுமையாக பாதிப்படைகிறது. நம் உணவு முறை ஒருப்பக்கம் என்றால், வாழ்க்கை முறையும் மிக மோசமாக உள்ளது. காலை எழுந்ததில் இருந்து இரவு படுக்கப் போகும் வரை நம் வாழ்க்கை பெரும்பாலும் மொபைலிலேயே கழிந்து விடுகிறது. வேலைக்கு சென்றால் அங்கும் நமக்கு உட்கார்ந்தபடியேதான் வேலை. இதையெல்லாம் மாற்ற வேண்டும். குறைந்தபட்சம் ஒருமணி நேரமாவது நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மருத்துவர் வழிகாட்டுதல்படி உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் நாமும் நம் குடும்பமும் ஆரோக்கியமாக இருக்க முடியும்” என அட்வைஸ் கொடுத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி... 7 மாநிலங்களில் NIA தீவிர சோதனை!

எம்ஜிஆர் பிரச்சாரத்தையும் மீறி அதிமுக வேட்பாளரை தோற்கடித்த இரட்டை இலை... 1977 தேர்தல் சுவாரஸ்யம்!

அதிரடி... ஸ்பாட்டிஃபை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ16,500 கோடி அபராதம்!

காதல் மனைவி தற்கொலை... வேதனையில் ஆசிட் குடித்து கணவர் உயிரை விட்ட பரிதாபம்!

அதிர வைத்த 'ஆபரேஷன் லோட்டஸ்'... காங்கிரஸ் கூண்டோடு காலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in