விஜய், உதயநிதியைத் தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு ரூ. 1 கோடி நிதியளித்தார் நெப்போலியன்!

நெப்போலியன்
நெப்போலியன்

நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், உதயநிதியைத் தொடர்ந்து நடிகர் நெப்போலியன் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இதற்காக நடிகர் சங்கம் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், 2000 – 2006 ஆம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் வைப்புநிதியாய் வழங்கியுள்ளார்’ என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து நடிகர் சங்கம் சார்பில், நன்கொடை பெறுவதாக சமூகவலைதளங்களில் வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற போலியான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதாரப் பிரச்சினையால் தடைபட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இந்நிகழ்வில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்பட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்பு கணக்கிடப்பட்டது.

இதற்கான நிதியை நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், உதயநிதி ஆகியோர் ரூ. 1 கோடி வழங்கினர். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 50 லட்சம் வழங்கினார். இப்போது நடிகர் நெப்போலியன் ரூ. 1 கோடி நிதியுதவி செய்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in