ஹாலிவுட்டிலும் ரீமேக்காகும் ‘த்ரிஷ்யம்’... குதூகலிக்கும் ரசிகர்கள்!

மலையாள ’த்ரிஷ்யம்’ நட்சத்திரங்களுடன் இயக்குநர் ஜீத்து ஜோசப்
மலையாள ’த்ரிஷ்யம்’ நட்சத்திரங்களுடன் இயக்குநர் ஜீத்து ஜோசப்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் ஹாலிவுட்டில் ரீமேக்காக இருக்கிறது. ஹாலிவுட்டில் ரீமேக்காகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

த்ரிஷ்யம்
த்ரிஷ்யம்

த்ரில்லர் வகைப் படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவை. அந்த வகையில், எமோஷன், பழிவாங்கல் ஆகியவற்றை மையப்படுத்தி கடந்த 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர்கள் மம்முட்டி, மீனா நடித்திருப்பார்கள். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தன்னிடம் அத்துமீறும் இளைஞனை மோகன்லால் கதாபாத்திரத்தின் மகள் உணர்ச்சி வேகத்தில் கொன்று விடுவார். அவரைக் காப்பாற்ற மோகன்லால் குடும்பம் எதிர்கொள்ளும் சவால்கள், அந்த கொலையை எப்படி மறைக்கிறது என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருப்பார்கள். தமிழில் இந்தப் படம் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக்கானது. கமல் இந்தப் படத்தில் நடித்திருப்பார். தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும், கொரியன் மொழியிலும் இந்தப் படம் ரீமேக் ஆனது.

‘த்ரிஷ்யம்’ இந்தியில்
‘த்ரிஷ்யம்’ இந்தியில்

‘த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது. மூன்றாம் பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மூன்றாம் பாகமே இந்த ‘த்ரிஷ்யம்’ சீரிஸின் இறுதி பாகம் எனவும் சொல்லப்பட்டது. இப்போது ஹாலிவுட்டிலும் இந்தப் படம் ரீமேக் ஆகிறது. ஹாலிவுட்டில் ரீமேக்காகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

இதுகுறித்து படக்குழு பகிர்ந்து கொண்டதாவது, “‘த்ரிஷ்யம்’ படம் உலகில் உள்ள அனைத்து பார்வையாளர்களுக்கும் ஏற்றது. அதனால்தான் ஹாலிவுட்டிலும் ரீமேக்காகிறது. ஹாலிவுட்டை அடுத்து இன்னும் 10 நாடுகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளோம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

2024ல் சக்தி வாய்ந்த 100 இந்தியர்கள்... மோடி முதலிடம்... அமித்ஷா இரண்டாமிடம்... அசரடித்த பட்டியல்!

மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரில் காதலியுடன் திருமணம்... வைரலாகும் வீடியோ!

சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்: செல்வப்பெருந்தகை தடாலடி பேட்டி!

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ எங்களிடம் இருக்கு... பணம் கேட்டு மிரட்டிய பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது!

மேட்ரிமோனி இணையதளங்கள் மூலம் வலை; கஸ்டம்ஸ் ஆபீசர் என பொய்... 259 பெண்களை ஏமாற்றிய பலே மோசடி மன்னன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in