அதிமுகவுடன் கூட்டணி
அதிமுகவுடன் கூட்டணி

அதிமுக கூட்டணியில் இணைந்தார் நடிகர் மன்சூர் அலிகான்!

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை இறுதி செய்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் எனச் சொல்லி வந்த நடிகர் மன்சூர் அலிகான் இப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

தமிழ் தேசிய புலிகள் என தான் நடத்தி வந்த கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் எனப் பெயர் மாற்றம் செய்து கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார் மன்சூர். வரும் மக்களவைத் தேர்தலில் தான் ஆரணியில் போட்டியிடப் போவதையும் உறுதிப்படுத்தியவர் இன்னும் நான்கைந்து தொகுதிகள் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறினார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர் தற்போதைய ஆளும் திமுக அரசை சாடிப் பேசினார். “இப்போதுள்ள அரசு பெரியார், அண்ணா கொள்கையை கடைபிடிக்கவில்லை. ஒட்டு மொத்த குடும்பம் ரூ.20 லட்சம் கோடிக்கு அதிபதியாக உள்ளது. அவர்களின் கார்ப்பரேட் நிறுவனங்கள் இல்லாத உலகநாடுகளே இல்லை” எனப் பேசி திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்திய மன்சூர் அலிகான், தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


மத்திய அரசில் 314 பணியிடங்கள் காலி... மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி... ஓபிஎஸ் உறுதியால் சின்னம் முடங்குமா?

பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்... 45 நாட்களுக்கு கோடை விடுமுறை!

சிஎஸ்கே அணிக்கு 'தல' தோனிக்குப் பிறகு யாரு கேப்டன்?... செயல் அதிகாரி கொடுத்த ட்விஸ்ட்!

விடிய, விடிய பேச்சுவார்த்தை... பாஜக அணியில் டி.டி.வி. தினகரனுக்கு 4, ஓபிஎஸ்சுக்கு 2 தொகுதிகள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in