இந்த அரசு பெரியார், அண்ணா கொள்கைகளை கடைபிடிக்கவில்லை... பரபரப்பு கிளப்பும் மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

’கூட்டணி யாருடன் வேண்டுமானாலும் வைப்போம். ஆனால், கூட்டணிக் கதவுகள் எங்களுக்கு இன்னும் திறக்கல. தொடர்ந்து தாக்குதல் தொடங்குவோம்’ என நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. எந்தக் கட்சியுடன் யார் கூட்டணி, யாருக்கு என்ன தொகுதி போன்றவை குறித்து பேச்சுவார்த்தைத் தொடங்கி இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில்தான் நடிகர் மன்சூர் அலிகான் கூட்டணி யாருடன் வேண்டுமானாலும் வைப்போம் எனப் பேசியுள்ளார். இவர் தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியை நடத்தி வந்தார். கடந்த ஜனவரி மாதத்தில் இதனை இந்திய ஜனநாயக புலிகள் எனப் பெயர் மாற்றம் செய்து இந்த மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக கூறினார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

இதன் பொதுக்கூட்டம் நேற்று ராமநாதபுரத்தில் நடந்தது. பொதுக்கூட்டம் முடிந்த பின்பு பத்திரிகையாளர்களின் கூட்டணி குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். அதில், “எளியவர்களுக்கான சமுதாயமாக மாற்ற வேண்டும். மக்கள் நலனே எங்கள் நோக்கம். கூட்டணி குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறோம். கூட்டணி யாருடன் வேண்டுமானாலும் வைப்போம். நிறைய தூது விடுகிறோம். ஆனால், பல கூட்டணிக் கதவுகள் எங்களுக்கு இன்னும் திறக்கல. நாங்கள் கதவுகளைத் தட்டுவோம், உடைப்போம். தொடர்ந்து தாக்குதல் தொடங்குவோம். நான் ஆரணியில் போட்டியிடுகிறேன். இன்னும் ஐந்து இடங்கள் பரிசீலனையில் உள்ளது” என்றார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

அதன் பிறகு மத்திய, மாநில அரசுகளைத் தாக்கிப் பேசினார் மன்சூர். “சமூகத்தில் குற்றம் நடக்கக் காரணமே வேலை வாய்ப்பு இல்லாததுதான். இப்போதுள்ள அரசு பெரியார், அண்ணா கொள்கையை கடைபிடிக்கவில்லை. அவர்களின் உண்மையான சித்தாந்தத்தை கடைபிடித்திருந்தால் இவர்கள் எளிமையாக இருக்க வேண்டும். ஆனால், ஒட்டு மொத்த குடும்பம் ரூ.20 லட்சம் கோடிக்கு அதிபதியாக உள்ளது. அவர்களின் கார்ப்பரேட் நிறுவனங்கள் இல்லாத உலகநாடுகளே இல்லை. இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு பயமில்லை” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது... 8.20 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

டொனால்ட் டிரம்பை தோற்கடித்து நிக்கி ஹாலே முதல் வெற்றியைப் பெற்றார்!

கோர விபத்து; அப்பளமாய் நொறுங்கிய கார்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

‘அரபிக்குத்து’ கீர்த்தி ஷெட்டி லேட்டஸ்ட் ஆல்பம்!

தமிழகம் முழுவதும் திமுகவை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in