அஜித்துக்குக்காக அடிதடியில் இறங்கிய நடிகர் கவின்... சுவாரஸ்ய சம்பவம்!

அஜித்- கவின்
அஜித்- கவின்

நடிகர் அஜித்துக்காக தான் அடிதடியில் இறங்கிய சம்பவம் ஒன்றை நடிகர் கவின் பகிர்ந்துள்ளார். இந்த விஷயத்தை அவரது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் அடுத்த மாதம் ‘ஸ்டார்’ படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படம் குறித்த பேட்டி ஒன்றில் நடிகர் கவின் தான் தீவிரமான அஜித் ரசிகர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

கவின்
கவின்

அந்தப் பேட்டியில் அவர் பகிர்ந்திருப்பதாவது, “நான் அஜித் ரசிகன் என்பதை விட அஜித் வெறியன் என்றே சொல்லலாம். ஒருமுறை அஜித், விஜய் இருவரது படங்களுமே ஒரே சமயத்தில் வெளியானது. அப்போது, இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மோதல் நடந்தது.

இதைக் கட்டுப்படுத்த அங்கே போலீஸ் வந்தது. அப்போது ரசிகர்களுக்கும் போலீஸாருக்கும் அடிதடி ஆனது. இதில் போலீஸ் ரசிகர்களைக் கட்டுப்படுத்த அடிதடி நடத்த எனக்கும் அதில் அடி விழுந்தது” என அஜித்துக்காகத் தான் அடிதடியில் இறங்கிய கதையை சொல்லி இருக்கிறார்.

அதேபோல, அஜித்தின் ‘முகவரி’, விஜயின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ ஆகிய படங்களைப் பார்த்துதான் ‘டாடா’ படத்தில் நடிப்பதற்குத் தயாரானதாக கவின் சொன்ன விஷயமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in