நடிகர் கமலுக்கு ரெட் கார்ட்? வலுக்கும் எதிர்ப்பு!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனத்திற்கு, படம் நடித்து தருவதாகச் சொல்லி ஏமாற்றியுள்ளார் நடிகர் கமல். இதனால், அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என வலுப்பு எழுந்து வருகிறது.

தங்களுக்கு விருப்பமில்லாத ’உத்தமவில்லன்’ படத்தின் கதையை தயாரிக்க வைத்து நடிகர் கமலஹாசன் நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக முன்பு இயக்குநர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இவரது தயாரிப்பு நிறுவனமான ‘திருப்பதி பிரதர்ஸ்’ தான் ‘உத்தம வில்லன்’ படத்தைத் தயாரித்து இருந்தது.

நடிகர் கமல்ஹாசன்- லிங்குசாமி
நடிகர் கமல்ஹாசன்- லிங்குசாமி

இந்தப் படம் ஏற்படுத்திய நஷ்டத்தால் அந்த நிறுவனத்திற்கு இன்னொரு படம் நடித்துத் தருவதாக கமல் ஒப்பந்தம் போட்டிருக்கிறார். ஆனால், ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவர் தேதி கொடுக்காததால் பொறுமை இழந்த ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த வாரம் புகார் அளித்திருந்தது.

இதற்கான பேச்சுவார்த்தை நடந்த நிலையில், கமலுக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் ஒருதரப்பினர் வலியுறுத்தி இருக்கின்றனர். இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்களாக சுபாஷ் சந்திரபோஸ், லிங்குசாமி ஆஜரான நிலையில் கமல் தரப்பில் யாருமே வரவில்லை. மூத்த நடிகராக இருந்து கொண்டு சங்கத்தை கமல் மதிக்காதது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

’உத்தம வில்லன்’
’உத்தம வில்லன்’

தங்களுக்குள் பேசி முடிக்காமல், பொதுவெளியில் அறிக்கை வெளியிட்டதால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மீது கமல் அதிருப்தியில் இருக்கிறாராம். அதுமட்டுமல்லாது, நஷ்டத்தொகையோடு சேர்த்து நடிக்காமல் இழுத்தடித்த இந்த ஒன்பது வருடங்களுக்கும் வட்டி போட்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு பணம் கொடுக்க முடியாது என்பதால் கமல் படம் நடித்துக் கொடுக்க இன்று சம்மதிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கமல் வராமல் போகவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டாமலேயே இருக்கிறது.

'தக் லைஃப்’ படத்தில் சிம்பு...
'தக் லைஃப்’ படத்தில் சிம்பு...

இதே போன்றதொரு பிரச்சினையைதான் நடிகர் சிம்புவும் இன்று எதிர்கொண்டிருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் போட்டு அட்வான்ஸ் தொகையும் வாங்கி இருக்கிறார் சிம்பு. ஆனால், ஒப்பந்தப்படி இந்தப் படத்திற்கு தேதி கொடுக்காமல் அலைக்கழித்திருக்கிறார்.

அதேசமயத்தில், கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் அவர் நடிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனால், ’சிம்புவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக ‘தக் லைஃப்’ படத்தில் அவர் நடிப்பதை நிறுத்த வேண்டும்’ என ஐசரி கணேஷ் இன்று கூறினார். இதனை அடுத்து, கமலும் ரெட் கார்ட் பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதால் இனி ‘தக் லைஃப்’ படம் என்னவாகும் என கலக்கத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in