நடிகருக்கு சோறூட்டி உதட்டில் முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர்... பதறிப்போன விஜய் ரசிகர்கள்!

துனியா விஜய்
துனியா விஜய்

கன்னட நடிகர் துனியா விஜய்க்கு ரசிகர்கள் சாப்பாடு ஊட்டியுள்ளனர். அப்போது ரசிகர் ஒருவர் ஆர்வக் கோளாறில் துனியா விஜயைக் கட்டியணைத்து உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னடத்தில் பிரபல நடிகர் துனியா விஜய். இவரது இயற்பெயர் விஜயகுமார். இவருடைய படங்கள் பெரும்பாலும் ஆக்‌ஷன் படங்களாக இருக்கும். இதனால், இவரை சினிமா உலகில் விஜி, பிளாக் கோப்ரா, துனியா விஜய் என்று தான் கூப்பிடுவார்கள். கடந்த ஜனவரி மாதத்தில் இவரது பிறந்தநாளுக்காக ரசிகர்களை அவர் சந்தித்தார்.

அப்போது ரசிகர்கள் அனைவரும் வரிசையாக அவருக்கு சோறு ஊட்டி மகிழ்ந்தனர். அப்போது ஆர்வக் கோளாறில் ரசிகர் ஒருவர் துனியா விஜய்க்கு சோறு ஊட்டியது மட்டுமல்லாது உதட்டில் முத்தம் கொடுக்க முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பழைய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதற்குக் காரணம் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இந்த வீடியோவைப் பார்த்த நடிகர் விஜயின் ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில், தற்போது 'GOAT' படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் கேரளா சென்றிருக்கிறார். இந்தப் படத்திற்காக கிளீன் ஷேவில், நேரான தலைமுடியோடு இருக்கிறார் நடிகர் விஜய். இப்போது விஜயின் கெட்டப்பும் வீடியோவில் துனியா விஜயின் தோற்றமும் ஒன்று போலவே இருக்கிறது.

இதனால், அந்த வீடியோவில் துனியா விஜயைப் பார்த்த ரசிகர்கள் அது விஜய் என்று குழம்பி போயுள்ளனர். விஜய்க்கு கேரளாவில் இப்படி ஒரு அசம்பாவிதமா என்று எண்ணி இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். ஆனால், அது விஜய் அல்ல துனியா விஜய் என்பது தெளிவானதும் ஆறுதல் அடைந்து வருகின்றனர் ரசிகர்கள்.
இதையும் வாசிக்கலாமே...

தஞ்சையில் வீதி, வீதியாக நடந்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு... ஆர்வமுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!

ராமேஸ்வரத்தில் மீனவர்களின் காலவரையற்ற போராட்டம் தொடங்கியது!

சரோஜாதேவி கால்ஷீட்டுக்கு காத்திருந்த எம்.ஜி.ஆர்!

10வது வேட்பாளரையும் அறிவித்தது பாமக... காஞ்சிபுரத்தில் களமிறங்குகிறார் ஜோதி வெங்கடேசன்!

அதிமுக வேட்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட திடீர் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in