தலைவரு நிரந்தரம்... ரஜினிக்காக தனுஷின் ட்வீட்!

 ரஜினிகாந்த் , தனுஷ்
ரஜினிகாந்த் , தனுஷ்

என்றுமே நான் ரஜினிகாந்த் ரசிகன் என்பதை ட்வீட் போட்டு மீண்டும் நிரூபித்துள்ளார் நடிகர் தனுஷ். தனுஷின் இந்த ட்வீட் ரஜினி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் , தனுஷ்
ரஜினிகாந்த் , தனுஷ்

இன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் தனுஷ் தனக்காக ஒரு கதை வைத்திருந்ததாகவும் ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் தன்னால் அதில் நடிக்க முடியவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இருந்தாலும் அதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் நடிகர் தனுஷ் தொடர்ந்து தான் ரஜினிகாந்த் ரசிகன் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தாலும், அவரது இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ படம் ஆரம்பிக்கும் போதே தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார் நடிகர் தனுஷ்.

அதேபோல, ‘லால் சலாம்’ டிரெய்லர் வெளியான போதும் அதைப் பகிர்ந்து, வாழ்த்துக் கூறினார்.

இன்று படம் வெளியான நிலையில், நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ‘லால் சலாம்’ வெற்றியடைய வேண்டும் என வாழ்த்தி ‘என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள்’ என ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவுடன் பகிர்ந்திருக்கும் புகைப்படத்தையும் ரீபோஸ்ட் செய்துள்ளார் தனுஷ்.

இதையும் வாசிக்கலாமே...


கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!

பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in