நடிகர் சங்க கட்டிடத்திற்கு நடிகர் தனுஷ் ரூ. 1 கோடி நிதியுதவி!

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு நடிகர் தனுஷ் இன்று ரூ. 1 கோடி நிதியுதவி செய்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

நடிகர்கள் கமல், விஜய் என தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள நடிகர்கள் பலரும் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடப் பணிகளுக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நடிகர் தனுஷ் ரூ.1 கோடி வைப்பு நிதியாக வழங்கியுள்ளார்.

உதயநிதி நன்கொடை
உதயநிதி நன்கொடை

பொருளாதாரப் பிரச்சினையால் தடைபட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்பு கணக்கிடப்பட்டது.

இதற்காக நடிகர்கள் கமல், விஜய், உதயநிதி ஆகியோர் ரூ. 1 கோடி வைப்புநிதியாக முன்பு வழங்கினர். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 50 லட்சம் வழங்கினார். இன்று நடிகர் தனுஷ் ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

புதிய கட்டிடப் பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக ரூ. 1 கோடியை தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோரிடம் தனுஷ் வழங்கினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!

பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து... பல லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!

ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல்... பள்ளிக்கல்வித்துறை புதிய அப்டேட்ஸ்!

16,500 கோடி பயிர்க் கடன்... இந்த ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்தது கூட்டுறவுத் துறை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in