'பார்க்கிங்’ பட பாணியில் பரபரப்பு... நடிகரின் மகனை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய கும்பல்!

 நடிகர் பிர்லா போஸ்
நடிகர் பிர்லா போஸ்

'பார்க்கிங்’ பட பாணியில் தனது வீட்டில் பிரச்சினை நடந்ததாகவும் இதனால், தன் மகனை கடத்தி அடித்ததாகவும் சின்னத்திரை நடிகர் பிர்லா போஸ் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

'பார்க்கிங்’ படத்தில்...
'பார்க்கிங்’ படத்தில்...

'திருமதி செல்வம்’, ‘பாரதி கண்ணம்மா’ உள்ளிட்டப் பல சீரியல்களில் நடித்த பிர்லா போஸ் சின்னத்திரை ரசிகர்களுக்கு வெகு பரிச்சயம். சீரியல்களில் மட்டுமல்லாது அவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்தான் அவரது வீட்டில் பார்க்கிங்கிற்காக பிரச்சினை நடந்துள்ளது. இதனால், அவரது மகனை பிரச்சினை செய்தவர்கள் கும்பலாகக் கடத்தி சென்று தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நடிகர் பிர்லா போஸ்
நடிகர் பிர்லா போஸ்

இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “நான் இப்போ சென்னையில குடியிருக்கற வீட்டுக்குக் கீழே ஒரு குடும்பம் இருக்கிறது. அந்த வீட்டுப் பையன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவனைப் பார்க்க நண்பர்கள் வந்தார்கள். அப்போது, ‘பார்க்கிங்’ படத்தைப் போல என் வீட்டிலும் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது என் காரை அந்தப் பையனுடைய நண்பர்கள் சேதப்படுத்தி விட்டனர். இதுபற்றி நான் அவர்களிடம் கேட்க, அந்தப் பசங்க வயது வித்தியாசம் இல்லாமல் என்னைத் தகாத வார்த்தையில் திட்ட ஆரம்பித்து விட்டார்கள். என் மகனும் பதிலுக்கு சத்தம் போட்டான். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாசம் ஆச்சு.

ஆனால், போன வாரம் டியூஷன் போயிட்டு வந்த என் மகனை பத்துப்பேர் கடத்திக் கூட்டிட்டு போய் அடிச்சு இருக்காங்க. இரத்தம் வெளியே வராதபடிக்கு எல்லாமே உள்காயம். இதை கீழ்வீட்டுப் பையன் தான் செஞ்சுருக்கான். இது தெரிஞ்சதுமே நான் பதறிப்போயிட்டேன். காவல்துறையில் புகார் கொடுத்திருக்கேன். அவங்களும் விசாரிட்டு இருக்காங்க. படிக்கற வயசுல மாணவர்கள் மத்தியில் இருக்கற இந்த வன்முறை எனக்கு அதிர்ச்சியா இருக்கு” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தேர்தல் 2024 | மகனை ஸ்கூலுக்கு அனுப்பற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு... நடிகர் வடிவேலு பேச்சு!

கனிமொழி எம்பி பங்கேற்ற கூட்டத்தில் போதை ஆசாமி ரகளை; வைரலாகும் வீடியோ!

இனி... 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!

சவுரவ் கங்குலியின் பயோபிக் படத்தில் நடிகர் ரஜினி... குஷியில் ரசிகர்கள்! எகிறும் எதிர்பார்ப்பு!

பாஜக வேட்பாளரின் ஆபாச வீடியோ... ரவுண்ட் கட்டும் எதிர்கட்சிகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in