ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்திற்காக நந்தியாளா பகுதிக்கு சென்றிருந்தார் அல்லு அர்ஜூன். அங்கு அலை கடலெனத் திரண்டு வந்த ரசிகர்கள் அவரை கண்டு உற்சாகமடைந்தனர்.
ஆந்திராவின் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 25 லோக்சபா தொகுதிகளுக்கும் அன்றைய தினமே தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக நந்தியாளா தொகுதியில் போட்டியிடும் ஷில்பா ரவிசந்திரன் கிஷோர் ரெட்டிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் அல்லு அர்ஜூன்.
இதற்காக, அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அவரைப் பாப்பதற்காக ரசிகர்கள் அலைகடலென திரண்டு வந்தனர். அவரின் காரை சுத்துப் போட்ட ரசிகர்கள் அந்த இடத்தை விட்டு அல்லு அர்ஜூன் நகர முடியாதபடிக்கு நின்று ‘புஷ்பா...புஷ்பா’ என அவரின் ‘புஷ்பா’ படத்தை சொல்லி கத்தினர். பின்பு காரில் இருந்து இறங்கி ரசிகர்கள் வெள்ளத்தில் நீந்தி சென்றார் அல்லு அர்ஜூன். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இன்னொரு பக்கம் ஜன சேனா கட்சி பவன் கல்யாணுக்கு ஆதரவு தெரிவித்து அவரின் அண்ணன் மகனான நடிகர் ராம் சரணும் இன்று மக்களிடம் ஆதரவு கேட்டார். ராம் சரண் - பவன் கல்யாண் இருவரும் இணைந்திருந்ததால் ராஜமுந்திரியிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
தேர்தல் பிரச்சாரத்தில் இறுதி நாளான இன்று தெலுங்கு சினிமாவின் இரு மாஸ் நடிகர்களும் இப்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருப்பது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!
மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!
இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!
ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!
லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!