மீண்டும் சிக்கலில் ‘விடாமுயற்சி’... அஜித் எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் அஜித்
நடிகர் அஜித்

நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளதால் தன்னுடைய அடுத்தப் படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம் அஜித். ‘விடாமுயற்சி’ படத்திற்கு அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.

நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே இந்தப் படம் ’நடக்குமா? நடக்காதா?’ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. அந்த அளவிற்கு படம் குறித்து அப்டேட் தராமல் தொடர்ந்து படக்குழு மெளனம் சாதித்து வருகிறது. த்ரிஷா படத்தில் இருந்து வெளியேறி விட்டார் எனவும், அஜித் கதையின் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

படப்பிடிப்புத் தளத்தில் இருப்பதை விட, அதன் பிரேக்கில் அஜித் பிரியாணி சமைக்கும் வீடியோக்களும், பைக் டூர் செல்லும் புகைப்படங்களும் தான் இணையத்தில் வைரலானது.

அஜித்தின் ‘விடாமுயற்சி’
அஜித்தின் ‘விடாமுயற்சி’

இதற்கிடையில், அஜித்திற்கு தலையில் சிறு அறுவை சிகிச்சை செய்து இப்போது நலமுடன் ‘விடாமுயற்சி’க்கு படப்பிடிப்புக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. 70% வரையிலும் படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இதன் படப்பிடிப்பின் அடுத்த ஷெட்யூல் தொடங்குவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டு வருகிறது. இதனால், அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பிற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், ‘விடாமுயற்சி’ படத்திற்கு அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தின் படப்பிடிப்பை உடனே தொடங்க சொல்லி இருக்கிறார் அஜித்.

ஆதிக் ரவிச்சந்திரன் -அஜித்
ஆதிக் ரவிச்சந்திரன் -அஜித்

’விடாமுயற்சி’ படப்பிடிப்பை முடித்து விட்டு ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், இப்போது மே 10ம் தேதியில் இருந்தே ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்புத் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தின் முதல் கட்ட ஷெட்யூலை முடித்துவிட்டு அடுத்தே ‘விடாமுயற்சி’க்கு செல்லத் திட்டமிட்டுள்ளாராம் அஜித்.

இதையும் வாசிக்கலாமே...


ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in