கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள்... அஜித் பட நடிகையின் அதிர்ச்சி தகவல்!

நடிகை மானு...
நடிகை மானு...

என்னைக் கட்டாயப்படுத்தி சினிமாவில் நடிக்க வைத்தார்கள் என நடிகை மானு தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் கடந்த 1998ம் ஆண்டு சரண் இயக்கத்தில் ‘காதல் மன்னன்’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அஜித்துடன் நடிகர் விவேக், பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கரண், ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இதில் கதாநாயகியாக மானு நடித்திருந்தார்.

இது நடிகை மானுவின் அறிமுகப் படம். இந்தப் படத்தில் அவரது திலோத்தமா என்ற கதாபாத்திரம் இப்போது வரை ரசிகர்கள் மத்தியில் டிரெண்டிங்க். ஆனால், இந்த ’காதல் மன்னன்’ படத்திற்குப் பின் அவர் சினிமாவில் பெரிதாக படங்கள் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்துகொண்டு சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டார். பின்னர் 16 ஆண்டுகள் கழித்து ’என்ன சத்தம் இந்த நேரம்’ என்கிற படத்தில் நடித்தார்.

’காதல் மன்னன்’
’காதல் மன்னன்’

இந்த நிலையில் நடிகை மானு சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தப் படத்திற்கு உள்ளே வந்தது குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, “எனது குடும்பத்தில் யாரும் சினிமாவில் இருந்ததில்லை. என் குடும்பத்தினர் பெரும்பாலானோர் டாக்டர்கள் தான். என்னுடைய தாத்தா கோபிநாத் பர்டோலால், அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். நான் படிப்பதற்காக தான் சென்னைக்கு வந்தேன்.

ஸ்கூல் படிக்கும்போதே விவேக்கும், சரணும் என்னை கட்டாயப்படுத்தி ’காதல் மன்னன்’ படத்தில் நடிக்க வைத்தார்கள். அந்த படத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்தினேன். பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டேன். என் கணவரும் டாக்டராக தான் உள்ளார்” என நடிகை மானு கூறி உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in