ஃபுட்பால் ஜெர்சி அணிந்து பிறந்த நாள் கொண்டாட்டம்...மகனின் ஆசையை நிறைவேற்றிய அஜித் - ஷாலினி!

ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டம்
ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டம்

மகனின் ஆசைப்படி ஃபுட்பால் ஜெர்சி அணிந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தை அஜித்-ஷாலினி தம்பதியர் நடத்தியுள்ளனர். இந்தப் புகைப்படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஷாலினி பகிர்ந்துள்ளார்.

ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டம்
ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் அஜித்-ஷாலினி தம்பதியின் மகன் ஆத்விக் பிறந்தநாள் கடந்த மார்ச் 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. அந்தப் புகைப்படங்களை ஷாலினி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் உண்டு. அனோஷ்கா- ஆத்விக் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். ஒன்பது வயதாகும் ஆத்விக் விளையாட்டில் படுசுட்டி. குறிப்பாக கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார். இவரது இந்த விளையாட்டுத் திறமையை அஜித்-ஷாலினி ஊக்குவித்து வருகின்றனர்.

போட்டிகளில் ஆத்விக்கை கலந்து கொள்ள வைப்பது, பள்ளியில் அவருடைய நண்பர்களுடன் அஜித் கால்பந்து விளையாடி மகிழ்வது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். சென்னை கால்பந்து கிளப்பின் ஜுனியர் அணிக்காக விளையாடி வருகிறார் ஆத்விக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டம்..
ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டம்..

அந்த வகையில், அவரது ஃபுட்பால் ஆர்வத்தை இன்னும் ஊக்கப்படுத்தும் வகையில் இப்போது ஆத்விக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தங்கநிறத்தில், கால்பந்து வடிவத்தில் உள்ள கேக் கொடுத்து மகிழ்வித்திருக்கிறார்கள். மேலும், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கட்டப்பட்ட கால்பந்து வடிவிலான அலங்கார பலூன்கள், பின்னணியில் ஒட்டப்பட்ட பேனரில் கால்பந்து வீரர்களான ரொனால்டினோ, டேவிக் பெக்காம் நடுவில் ஆத்விக் இருக்கும் வகையில் போஸ்டரை டிசைன் செய்துள்ளனர்.

இப்படி ஃபுட்பால் தீமில் ஆத்விக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு திட்டமிட்டு மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறார்கள் அஜித்-ஷாலினி. ரசிகர்களும் ஆத்விக்கிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி... 7 மாநிலங்களில் NIA தீவிர சோதனை!

எம்ஜிஆர் பிரச்சாரத்தையும் மீறி அதிமுக வேட்பாளரை தோற்கடித்த இரட்டை இலை... 1977 தேர்தல் சுவாரஸ்யம்!

அதிரடி... ஸ்பாட்டிஃபை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ16,500 கோடி அபராதம்!

காதல் மனைவி தற்கொலை... வேதனையில் ஆசிட் குடித்து கணவர் உயிரை விட்ட பரிதாபம்!

அதிர வைத்த 'ஆபரேஷன் லோட்டஸ்'... காங்கிரஸ் கூண்டோடு காலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in