அடடே அஜித்... ஹைதராபாத்தில் கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தல்!

நடராஜன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித்...
நடராஜன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித்...

கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில், யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகர் அஜித் சர்ப்ரைஸாக கலந்து கொண்டு நடராஜனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் கலாநிதி மாறனின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த நடராஜன் இப்போது ஐபிஎல் மூலம் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப வந்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டி நாளை ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதால் அங்கு கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் அவர்களது அறைக்கு அருகிலேயே நடிகர் அஜித்தும் தங்கி இருந்தார். நேற்று நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் கேள்விப்பட்ட அவர், அங்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

நடராஜனுக்கு கேக் ஊட்டி மகிழ்வித்திருக்கிறார். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் முத்தையா முரளிதரன் உட்பட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர். வெள்ளை நிற ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட்டில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சிம்பிளாக வந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ர அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சேலம், சின்னப்பம்பட்டி கிரமாத்தை சேர்ந்தவர் கிரிக்கெட்டர் நடராஜன். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...   

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in