அரசியல் கட்சிக்கு ஆதரவா? - போலி வீடியோ விவகாரம் குறித்து அமீர்கான் பரபரப்பு புகார்!

நடிகர் அமீர்கான்
நடிகர் அமீர்கான்

பாலிவுட் நடிகர் அமீர் கான் சமீபத்தில், வரவிருக்கும் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும்படியான வீடியோ ஒன்றில் தோன்றினார். இந்த வீடியோ போலியானது என்று காவல்துறையில் அமீர்கான் தரப்பு புகார் கொடுத்திருக்கிறது.

தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களாகவும் தங்கள் கட்சிகளை ஆதரித்து நட்சத்திரப் பேச்சாளர்களாகவும் நடிகர்களை தங்களுடன் இணைத்துக் கொள்வது அரசியல் கட்சிகளின் வழக்கம். அப்படி குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியை ஆதரித்து அமீர்கான் வாக்கு சேகரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. ஆனால், இது போலியானது என்று அமீர்கான் தரப்பு மறுத்துள்ளது. மேலும், இதுதொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளது.

நடிகர் அமீர்கான்
நடிகர் அமீர்கான்

அமீர்கான் தரப்பு இதுதொடர்பாக தெரிவித்துள்ளதாவது, ‘அமீர்கான் தனது 35 ஆண்டுகால வாழ்க்கையில் எந்த அரசியல் கட்சியையும் ஆதரித்துப் பேசியதில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். மக்கள் மத்தியில் தேர்தல் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த காலங்களில் தேர்தல் கமிஷனுடன் இணைந்து அவர் பணிபுரிந்துள்ளார்.

இதுதவிர்த்து, எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவாக அவர் செயல்பட்டதில்லை. இப்போது இணையத்தில் அமீர்கான் குறிப்பிட்ட கட்சி ஒன்றிற்கு ஆதரவு கொடுப்பதாக வரும் வீடியோ போலியானது. இதுதொடர்பாக மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறோம். வர இருக்கும் தேர்தலில் நீங்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அமீர்கான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2003ஆம் ஆண்டு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அமீர்கான் பேசியதாக போலி வீடியோ வைரலானது. இதேபோன்று, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் விஜயின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ பாஜகவுக்கு வாக்களித்து, திராவிட கட்சிகளைப் புறக்கணிப்போம் என்று சொன்னதாக போலி அறிக்கை ஒன்று வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in