ஹெலிகாப்டரில் இருந்து பணத்தை அள்ளிவீசிய பிரபல நடிகர்... அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

பணமழையைக் கொட்டிய பிரபல நடிகர்
பணமழையைக் கொட்டிய பிரபல நடிகர்

செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான கமில் பார்டோசெக் என்பவர் ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கமில் பார்டோசெக்
கமில் பார்டோசெக்

செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கமில் பார்டோசெக் மக்களுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தை அளித்துள்ளார். ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மில்லியன் டாலர் பணத்தை மக்களுக்கு வீசியுள்ளார். பணம் கொட்டும் பகுதிக்கு மக்கள் பைகளுடன் வந்து பணத்தை எடுத்துச் சென்றனர்.

உலகின் முதல் பண மழையின் வீடியோவை கமில் தனது பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் பணத்தை எடுக்க போட்டி போடும் காட்சியை காணலாம்.

பார்டோசெக்கின் இந்த நிகழ்வு சில எதிர்வினைகளை சந்தித்துள்ளது. சிலர் அவரது தாராள மனப்பான்மையை பாராட்டி இருந்தாலும் பலர் அவரை பணத்தை வீணடிப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in