’ஜிகர்தண்டா’ பட பாணியில் கல்லூரி மாணவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரவுடி!

கடத்தல்
கடத்தல்

சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி ரவுடியை ஆசை காட்டி மோசம் செய்திருக்கிறார் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர்.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. இதன் இரண்டாம் பாகமும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்படும் ரவுடி, போலி இயக்குநரிடம் ஏமாறுவது தான் கதை. பின்பு அவனே எப்படி மக்கள் நாயகனாக மாறுகிறான் என்று படம் அமைக்கப்பட்டிருக்கும்.

நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் 'ஜிகர்தண்டா- டபுள் எக்ஸ்' படத்தில்...

முதல் பாதி கதைபோல, சினிமாவில் ஹீரோவாக ஆசைப்பட்டிருக்கிறார் சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த ரவுடி கோபிநாத். இவருக்கு சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த நவீன்குமார் என்ற பல் மருத்துவக் கல்லூரி மாணவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பழக்கத்தில் கோபிநாத்தின் சினிமா ஆசையைத் தெரிந்து கொண்ட நவீன்குமார் பணம் கறக்க நினைத்து திட்டம் தீட்டியிருக்கிறார். கோபிநாத்தின் கட்டுமாஸ்தான உடற்கட்டு சினிமாவுக்கு செட் ஆகும் எனவும், அவரை தான் கதாநாயகனாக நடிக்க வைப்பேன் என்று உறுதி கொடுத்தும் ரூ.30 ஆயிரம் வரை பணம் வாங்கி ஏமாற்றி இருக்கிறார்.

 கடத்தல்
கடத்தல்

இதனால், ஆத்திரமடைந்த கோபிநாத் தனது கும்பலுடன் நவீன்குமாரை ஸ்கெட்ச் போட்டு கடத்தி இருக்கிறார். அவரின் அம்மாவிடமும் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். இதுகுறித்து சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்படவே, இவர்களை வலைவிரித்து தேட ஆரம்பித்திருக்கிறது காவல்துறை. விஷயம் அறிந்த கோபிநாத், நவீன்குமாருடன் தானாகவே முன்வந்து சரணடைந்திருக்கிறார். இவர்களை காவல்துறை விசாரித்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in