தடுமாற்றத்தில் ‘திரெட்ஸ் ஆப்’... ட்விட்டருக்கு மாற்றாக உருவான சமூக ஊடக செயலி அதலபாதாளத்தில் விழுந்தது எப்படி?

திரெட்ஸ்
திரெட்ஸ்

ட்விட்டருக்கு மாற்றாக, அதே வேளையில் அச்சுஅசலாக அதனை அடியொற்றி, ஃபேஸ்புக் குடும்பத்தில் இருந்து உருவான ’திரெட்ஸ் ஆப்’ தற்போது தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

’திரெட்ஸ்’ என்ற பெயரில் மெட்டா நிறுவனம் வெளியிட்ட சமூக ஊடக செயலி ஒரே வாரத்தில் 100 மில்லியன் பயனர்களை சேர்த்தது. அதைப் பார்த்து ட்விட்டரின் அதிபர் எலான் மஸ்க் கலங்கிப் போயிருக்க வேண்டும். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு, நிர்வாக சீர்திருத்தத்தின் பெயரால், ஊழியர்கள் முதல் அதன் பயனர்கள், விளம்பரதாரர்கள் என சகல தரப்பிலும் அதிருப்தியை சம்பாத்தித்து இருந்தார் எலான் மஸ்க்.

அந்த நேரத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமாக மெட்டா சார்பில் திரெட்ஸ் அறிமுகமானது. ட்விட்டருக்கு போட்டி என்ற பெயரில் உருவானபோதும், அப்படியே அதனை அடியொற்றியும், ஒருசில கூடுதல் அம்சங்களோடும் வெளியான திரெட்ஸ் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது. எடுத்த எடுப்பில் அதில் இணைந்த 10 கோடி பயனர்களே அதற்கு சாட்சி. ஆனால் அது நீடிக்கவில்லை என்பது பெரும் சோகம்.

இன்றைய தேதியில் திரெட்ஸ் செயலியை சீந்துவார் இல்லை. இதற்கு காரணம், மெட்டா நிறுவனத்தின் பேராசையும், பயனர்களின் நம்பிக்கையை இழந்ததுமே காரணம்.

ட்விட்டருக்கு போட்டி என ஃபேஸ்புக் குடும்பத்திலிருந்து உருவான திரெட்ஸ் கணக்கில் இணைய, இன்ஸ்டாகிராம் பயனராக இருப்பவர்களை மெட்டா பயன்படுத்திக்கொள்ள பார்த்தது. இன்ஸ்டாகிராமின் நீட்சியாகவே பயனர்கள் திரெட்ஸில் இணைந்து கொள்ள வசதி செய்யப்பட்டது. அதாவது, இன்ஸ்டாகிராம் பயனர்கள் அனைவருக்குமே ஒரு திரெட்ஸ் கணக்கு தானாக உருவானது.

திரெட்ஸ்
திரெட்ஸ்

இப்படி எளிதில் திரெட்ஸ் கணக்கில் இணைய முடிந்தபோதும், அதிலிருந்து வெளியேறுவது சாத்தியப்படவில்லை. இன்ஸ்டாகிராம் கணக்கை அழித்தால் மட்டுமே திரெட்ஸ் கணக்கை அழிக்க முடியும்; இதற்கு பயனர்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கவே, அந்த நடைமுறையில் மெட்டா சில மாற்றங்களை கொண்டு வந்தது. அடுத்தபடியாக, திரெட்ஸ் செயலி வாயிலாக பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஃபேஸ்புக் விவகாரத்தில், 2016 அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ’கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா’ நிறுவனத்துக்கு ஃபேஸ்புக் பயனர்களின் தரவுகளை திறந்துவிட்ட பழியை இன்னமும் மெட்டா சுமந்து கொண்டிருக்கிறது. தற்போது திரெட்ஸ் வாயிலான திருட்டுப் பட்டமும் மெட்டாவின் பெயரைக் கெடுத்தன.

திரெட்ஸ்
திரெட்ஸ்

அடுத்தபடியாக ட்விட்டருக்கு மாற்று என்ற பெயரில் அறிமுகமானபோதும், அத்தனை எளிதில் ட்விட்டரின் அபிமானத்தை திரெட்ஸால் உடைக்க முடியவில்லை. இன்ஸ்டாகிராம் பயனர்களே திரெட்ஸில் பெருமளவு இணைந்திருந்ததால், அவர்களால் ட்விட்டர் பாணியிலான திரெட்ஸை ரசிக்க முடியவில்லை. எனவே, 100 மில்லியனாக இருந்த பயனர்களின் எண்ணிக்கை வெகு சீக்கிரத்தில் 10 மில்லியனுக்கு சரிந்தது.

சுதாரித்துக்கொண்ட மெட்டா நிறுவனத்தின் மார்க் சக்கர்பெர்க், திரெட்ஸ் சமூக ஊட்க செயலியை தனித்தன்மை வாய்ந்ததாக கட்டமைக்க உறுதிபூண்டு அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார். இதன்படி திரெட்ஸ் மீண்டு எழுமா அல்லது வீழ்ச்சியின் பாதையில் மேலும் சரியுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in