இன்ஸ்டாகிராம் முடக்கம்
இன்ஸ்டாகிராம் முடக்கம்

அடிக்கடி முடங்கும் இன்ஸ்டாகிராம்; ட்விட்டரில் பொங்கித் தீர்த்த நெட்டிசன்கள்

இன்ஸ்டாகிராம் செயலி சர்வதேச அளவில் நேற்று திடீரென முடங்கியது, இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமூக ஊடக செயலிகளில் தனித்துவமானது இன்ஸ்டாகிராம். புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றலின் வாயிலாக தங்கள் இருப்பை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள் விரும்புவோரும், விசிறிகளுடன் தொடர்பை பேணும் பிரபலங்களுமாக இன்ஸ்டாகிராமை அதிகமானோர் நம்பியிருக்கிறார்கள். இந்நிலையில் நேற்றிரவு மொபைல் செயலி பயன்பாட்டில், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியது.

இணையவாசிகள் அதிகம் சஞ்சரிக்கும் மாலை மற்றும் இரவில், இன்ஸ்டாகிராம் துவண்டதால் அதில் புழங்குவோர் ஏமாற்றமடைந்தனர். இன்ஸ்டாகிராம் பிரச்சினை தங்களுக்கு மட்டுமா என்பதை அறிந்துகொள்ள ட்விட்டர் மற்றும் இதர சமூக ஊடகங்களில் கூடி தங்களது ஆற்றாமையை பதிவிட்டனர். இதுவே மீம்ஸ் மற்றும் கண்டன பதிவுகளாக நெட்டிசன்கள் மத்தியிலிருந்து வெளிப்பட்டது.

இன்ஸ்டா முடக்கம்
இன்ஸ்டா முடக்கம்

சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராம் டவுன் ஆனதை இணைய போக்குவரத்தை கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் தளம் உறுதி செய்தது. இந்தியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலும் இன்ஸ்டாகிராம் டவுன் ஆனதையும், அதன் பாதிப்பின் வீரியத்தையும் டவுண்டிடெக்டர் பட்டியலிட்டது. ஆனால் பின்னிரவில் இன்ஸ்டாகிராம் இயல்புக்கு திரும்பிய பிறகும், அது தொடர்பாக மெட்டா நிறுவனம் விளக்கம் எதையும் அளிக்கவில்லை.

இது இணையவாசிகளை மேலும் சீண்டவே, மீம்ஸ்களில் மேலும் காரமாக பதிவிட ஆரம்பித்தனர். மெட்டாவின் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மட்டுமன்றி வாட்ஸ் ஆப் செயலியும் டவுன் ஆவது தொடர்வதாகவும், குறிப்பாக இன்ஸ்டாகிராம் முடங்குவது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும் நெட்டிசன்கள் புலம்பினர். மேலும் இவை தொடர்பான புகார்களை மெட்டா முறையாக செவிமெடுப்பதில்லை என்றும் புகார்களை பதிவிடும் பயனர்கள், அதில் மறக்காது மார்க் சக்கர்பெர்க்கையும் கோர்த்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை தமிழகத்திற்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

திமுக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான 40 இடங்களில் ரெய்டு!

சிறையில் இனி கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்!

இன்று 11 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!

குட்நியூஸ்: இன்று முதல் 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!

x
காமதேனு
kamadenu.hindutamil.in