இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் அடுத்த அப்டேட்... ஆன்லைன் ஆக்டிவிட்டி தடயங்களை அடுத்தவர் அறியாது மறைப்பது எப்படி?

இன்ஸ்டாகிராமில் ’ஆன்லைன் ஆக்டிவிட்டி’ மற்றும் ’லாஸ்ட் ஆக்டிவ் டைம்’ உள்ளிடவற்றை மறைப்பது குறித்து மெட்டா சார்பில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

நடப்பு இளசுகளின் பெருவிருப்பத்துக்குரிய சமூக ஊடக தளங்களில் முதன்மையானது இன்ஸ்டாகிராம். புகைப்படங்கள், ரீல்ஸ் மூலமாக இதில் பிரபலமான சாமானியர்கள் ஏராளம். அதே போன்று பிரபலங்கள் பலரும் தங்களது ரசிகர்கள் மற்றும் விசிறிகளுடன் தொடர்பை பராமரிக்கவும் இன்ஸ்டாகிராமை நம்பி இருக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

ஆனால் சாதகங்களை அள்ளித்தரும் இந்த சமூக ஊடகங்கள் அதே அளவுக்கு பாதகங்களையும் கொண்டுள்ளன. அவற்றில் முக்கியமானது பயனர்களின் ஆன்லைன் சார்ந்த தனியுரிமை பாதுகாப்பு. சமூக ஊடகங்கள் மட்டுமன்றி இணையத்தில் நாம் வலம்வருவதில் நமது டிஜிட்டல் தடயங்கள் அனைத்துமே நமது விருப்பமின்றி பதிவு செய்யப்படுகின்றன. கூகுள் போன்ற தேடுபொறிகள் நமக்கான விளம்பரங்களை காண்பிப்பதற்காக அவற்றை பயன்படுத்திக்கொள்கின்றன.

இவற்றுக்கு அப்பால் நமது இணைய செயல்பாடுகளை தனிநபர்களும் ஒற்றறிய மற்றும் பின்தொடர இயலும். முக்கியமாக சமூக ஊடகங்களில் நமது ஆன்லைன் செயல்பாடு மற்றும் கடைசியாக செயல்பாட்டில் இருந்தது போன்றவற்றை அநாமதேயர்கள் அறிந்துகொள்ள முயற்சிக்கலாம். இவை குறிப்பிட்ட பயனரின் தனியுரிமையை அப்பட்டமாக பாதிக்கக்கூடியது.

எனவே, பாதுகாப்பான சமூக ஊடக உலாவலுக்கு பயனர்கள் தங்களது ஆன்லைன் ஆக்டிவிட்டியை மறைக்கவே விரும்புவார்கள். அவர்களுக்காக இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதற்கு பயனர்கள் தங்களது புரொஃபைலின் வலது கீழே உள்ள புரொஃபைல் படத்தை சொடுக்க வேண்டும்.

இப்போது விரியும் புரொஃபைல் பக்கத்தில் வலது மேல் மூலையை தட்டினால், செட்டிங்ஸ் மற்றும் ஆக்டிவிட்டி பக்கம் விரியும். அதில் உள்ள பல்வேறு தலைப்புகளில் How others can interact with you என்பதன் கீழ் உள்ள Messages and story replies என்பதை சொடுக்க வேண்டும்.

அதிலிருந்து விரியும் பக்கத்தில் Show activity status என்பதை சொடுக்கவும்.

இங்கே இந்த ஆக்டிவிட்டி ஸ்டேட்டஸ் என்பதை இங்கே முடக்கி வைக்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in