ஆகஸ்ட்டுடன் ஜிமெயிலுக்கு மூடுவிழா? கூகுள் சொல்லும் விளக்கம் இதுதான்!

ஜிமெயிலுக்கு மூடுவிழா?
ஜிமெயிலுக்கு மூடுவிழா?

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் பிரபல மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் மூடுவிழா காண்கிறது என்றொரு தகவல் சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாக வைரலாகி வந்தது. இதனையடுத்து கூகுள் வெளியிட்ட விளக்கம், ’சமூக ஊடக தகவலில் பாதி மட்டுமே உண்மை’ என தெளிவுபடுத்தி உள்ளது.

நடப்புலக இணையசேவை மற்றும் தகவல் தொடர்பில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவைக்கு மறுக்க முடியாத இடம் உண்டு. அன்றாடம் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஜிமெயில் சேவை, வெறும் தகவல் தொடர்புக்கு அப்பாலும் நீடித்துள்ளது. ஜிமெயிலுக்கு மாற்றான மெயில் சேவைகள் ஏராளமாக களத்தில் இருக்கின்றன. ஆனபோதும் இணையம் வாயிலான பல்வேறு நுகர்வுகளுக்கு ஜிமெயில் கணக்கு அவசியமாகிறது. உதாரணத்துக்கு ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்போர் தங்களது ஸ்மார்ட்போனை உயிர்ப்பித்து, அதன் சகல சேவைகளையும் பெற ஜிமெயில் கணக்கு அவசியமாகிறது.

ஜிமெயில்
ஜிமெயில்

இது தவிர்த்தும் இதர கூகுள் வழங்கும் அனைத்து சேவைகளைப் பெறவும் ஜிமெயில் கணக்கு அத்தியாவசியம். கூகுளுக்கு அப்பால் வாட்ஸ் ஆப் போன்றவற்றின் தரவுகளை எதிர்காலத்தேவைக்காக சேமிக்கவும் ஜிமெயில் உடன் இணைந்த கூகுள் டிரைவ் சேவை பயனாகிறது. இந்த நோக்கில் ஜிமெயிலும் தனது சேவையை நாளுக்கு நாள் அப்டேட் செய்தே வருகிறது. இவற்றுக்கு மத்தியில் ஜிமெயிலுக்கு மூடுவிழா என்பது பயனர்களால் கற்பனை செய்ய இயலாதது. ஆனால் பிரபல சமூக ஊடக தளமான டிக்டாக்கில் வெளியான ஒரு வைரல் பதில், எதிர்வரும் ஆகஸ்ட் 1 உடன் ஜிமெயில் சேவை நிறுத்தப்படுவதக தெரிவித்தது.

கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் பயனர்களுக்கு அனுப்பிய மெயில் அடிப்படையில் இந்த பீதி பரவியது. ஜிமெயில் இல்லாத இணைய உலகம் எப்படியிருக்கும் எனவும், திடீரென ஜிமெயில் காலாவதியாவதால் அவற்றுடன் பின்னிப்பிணைந்திருக்கும் பயனர்களின் பல்வேறுபட்ட சேவைகள் எவ்வாறெல்லாம் முடங்கும் எனவும் டிக்டாக்கில் பலரும் பதிவிட்டு பீதியை அதிகரித்து வந்தனர். கூகுள் நிறுவனம் அனுப்பிய, ‘மின்னஞ்சல்களை அனுப்புதல், பெறுதல் மற்றும் சேமித்தலை இனிமேல் ஜிமெயில் ஆதரிக்காது’ என்ற மின்னஞ்சல் வாசகம் இணையத்தில் வைரலானதை அடுத்து, ஜிமெயில் சார்பில் எக்ஸ் தளத்தில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

ஜிமெயில்
ஜிமெயில்

அதன்படி, கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவை அதன் ஹெச்டிஎம்எல்(HTML) பதிப்பு பயனர்கள் மத்தியில் மட்டும் ரத்தாகிறது என்றும், வழக்கமான ஜிமெயில் சேவை தொடரும் எனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கமளித்தனர். ஹெச்டிஎம்எல் பதிப்பிலான ஜிமெயில் சேவைக்கு அவசியம் குறைந்ததை அடுத்து இந்த ஏற்பாட்டில் கூகுள் நிறுவனம் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இணைய வேகம் மிகவும் குறைவான பகுதிகளிலும், ஜிமெயில் சேவையை உறுதி செய்வதற்காக அதன் ஹெச்டிஎம்எல் பதிப்பு உதவி வந்தது. ஆனால், தற்போது அதற்கன தேவை குறைந்ததால் அந்த பதிப்பு மூடுவிழா காண்கிறது. இதர பயனர்களுக்கான ஜிமெயில் சேவை வழக்கம் போலவே தொடரும் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்தடுத்து பெயர்ச்சியாகும் கிரகங்கள்... ஒரே நாளில் நவக்கிரக சுற்றுலாவுக்கு சிறப்பு பேருந்து அறிமுகம்!

அண்ணன் பேச்சை அண்ணனே கேட்கமாட்டாரு... சீமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கூகுள் பே சேவை ஜூன் 4 முதல் நிறுத்தம்...பயனாளர்கள் அதிர்ச்சி!

ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு... அதிர்ச்சியில் மக்கள்!

தமிழ்நாட்டில் ஆபரேஷன் லோட்டஸ்... கே.பி.ராமலிங்கம் சொல்லும் கணக்கு நடக்குமா?

ReplyReply allForwardAttendee panel closed

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in