ட்விட்டர் பதிவில் ஆபாச வசை... மீண்டும் சர்ச்சையில் நடிகை கஸ்தூரி!

கஸ்தூரி
கஸ்தூரி

ட்விட்டர் பதிவில் ஆபாச வசை சொல்லை பிரயேகித்ததாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

சமூக ஊடக தளங்களில் தீவிரமாக இயங்குவோரில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். திரையுலக பங்களிப்பில் கஸ்தூரி ஒதுங்கியபோதும், அரசியல் அக்கப்போர்களில் அவரது குரல் தனித்து ஒலித்து வருகிறது. தனது பார்வையிலும், கருத்திலும் திடமாக களமாடும் கஸ்தூரி அதே வேகத்தில் பதிவுகளையும் பகிர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார்.

தனது வலதுசாரி ஆதரவு பதிவுகளால், திமுக அனுதாபிகளின் தாக்குதலுக்கும் அடிக்கடி ஆளாவார். அதே போன்று எதிர்தரப்பை சீண்டும் வகையிலும் துணிச்சலான பதிவுகளை கஸ்தூரி தொடர்ந்து இட்டு வருகிறார். இதனால் வரம்பு மீறிய வசைகள், தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் கஸ்தூரி ஆளாவதுண்டு. ஆனபோதும் தனது போக்கில் அவர் தீர்மானமாக தொடர்ந்து வருகிறார்.

கஸ்தூரி
கஸ்தூரி

அந்த வரிசையில் இன்றும் கஸ்தூரி புதிய சர்ச்சைக்கு ஆளானார். திமுக ஐடி விங் அங்கத்தினர் எனக் குறிப்பிட்டு ஒருவர் குறித்த பதிவை, இன்று கஸ்தூரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விமர்சித்திருந்தார். தனது முந்தைய பதிவு மற்றும் அதற்கு அந்த திமுக பதிவர் வரம்பு மீறி பதில் கூறியிருந்தது ஆகியவற்றையும் அவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அந்த பதிவில் சேர்த்திருந்தார்.

அப்படி கஸ்தூரி இட்டிருந்த பதிவின் கீழ் இன்னொருவர் பிரசன்னமாகி, கஸ்தூரியை ஆண்டி என விளித்து கிண்டல் செய்திருந்தார். அவருக்கு சென்னையில் பிரபலமான ஆபாச வசையில் சுருக்கமாக பதில் பதிவிட்டிருந்தார் கஸ்தூரி. இதனை முன்வைத்து, கஸ்தூரிக்கு எதிரானவர்கள் வழக்கம்போல கச்சைகட்ட ஆரம்பித்துள்ளனர்.

கஸ்தூரி ட்விட்டர் பக்கம்
கஸ்தூரி ட்விட்டர் பக்கம்

திராவிடர் என்பதை திரித்து ஆபாச வழியில் திராவிட எதிர்ப்பாளர்கள் உச்சரிக்கும் வார்த்தை போன்றே, திராவிட ஆதரவாளர்கள் புதிய வார்த்தை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்த வார்த்தையும், கஸ்தூரியின் இன்றைய பதிவின் கீழ் அதிகம் பிரயேகிக்கப்பட்டு வருகிறது.

ட்விட்டர் உலகத்தில், குழாயடிச் சண்டைகளை விஞ்சும் அளவுக்கு பரஸ்பரம் ஆபாச சேற்றை அள்ளி இறைப்பது வழக்கமாக நடைபெறுவதுதான். எனினும், அதையே ஒரு பெண் உபயோகித்தார் என்பதற்காக கஸ்தூரிக்கு எதிரான வன்மங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் டிவிட்டர் பிரபலங்கள் ஒரு வேகத்தில் பதிவிடும் இதுபோன்ற வசை சொற்களை பிற்பாடு நீக்கிவிடுவார்கள். ஆனால் கஸ்தூரி அவ்வாறின்றி தனது பதிவை நீக்காது வைத்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in