நடிகை யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

காமதேனு

'துருவங்கள் பதினாறு’ படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

சமூகவலைதளத்தில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் யாஷிகா.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் ரசிகர்களிடையே பிரபலமாக்கியதில் ‘பஹீரா’, ‘தி லெஜெண்ட்’ படங்களிலும் வலம் வந்தார்.

பிக் பாஸ் தமிழ் இரண்டாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டு ரசிகர்களிடையே இன்னும் பிரபலமானார் யாஷிகா.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நைட் பார்ட்டி முடித்துவிட்டு இரவு வீடு திரும்பும்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்து ஒன்றில் யாஷிகா சிக்கினார்.

அவர் கார் ஓட்டி வர உடன் பயணித்த அவரது தோழி விபத்தில் இறந்தார்.

இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட யாஷிகா, தனது தோழி குறித்து வருத்தம் தெரிவித்துப் பல பதிவுகளைப் பகிர்ந்திருந்தார்.

இப்போது அந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்துள்ளவர் மீண்டும் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘சில நொடிகளில்’ ஆகிய படங்கள் வெளியானது.