நடிகை ரைசா வில்சனின் அசத்தல் ஆல்பம்!

வெப் ஸ்டோரீஸ்

சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை ரைசா வில்சன்.

சினிமாவில் பெரிய பிரேக் எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு பிக் பாஸ் கைக்கொடுத்தது.

பிக் பாஸ் மூலம் கிடைத்த புகழை பயன்படுத்தி சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

கதாநாயகியாக அவர் நடித்த முதல் படம் ‘பியார் பிரேமா காதல்’.

இந்தப் படம் ஹிட்டானது மட்டுமல்லாமல், ரைசாவின் நடிப்புக்கும் வரவேற்பு இருந்தது.

இடையில் முக அழகு சிகிச்சைக்காக மருத்துவரிடம் சென்றவர் தவறான சிகிச்சையால் தன் முகம் வீங்கி விட்டது என போட்டோக்களைப் பகிர்ந்து அந்த மருத்துவருடன் சண்டைக்குச் சென்ற விஷயம் சர்ச்சையானது.

அதன் பின்பு, கொஞ்ச நாள் சைலண்டாக இருந்த ரைசா தற்போது இணையத்தில் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.

அவரது முகம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல உள்ளது என சொல்லி வருகின்றனர். எப்படி இருந்தாலும் அவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் கொடுத்து வருகின்றனர்.