தமிழ் சினிமாவில் கோலோச்சும் மலையாள நடிகைகள்...இதில் யாருடைய கேரக்டர் உங்களுக்குப் பிடிக்கும்?

வெப் ஸ்டோரீஸ்

மலையாள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நயன்தாரா தனது ஆரம்ப காலத்தில் மலையாளத்தில் படங்கள் நடித்திருந்தாலும், தற்போது தமிழ் சினிமாவில் அவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’. ’நானும் ரெளடி தான்’ காதும்மா, ’ராஜா ராணி’ ரெஜினா, ’யாரடி நீ மோகினி’ கீர்த்தி, ’அறம்’ மதிவதினி, ’ஜவான்’ நர்மதா என பல பெயர் சொல்லும் கதாபாத்திரங்களில் அசத்தியுள்ளார் நயன்.

மொட்ட மாடி கல்பனாவாக தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் அசின். விஜய், அஜித், கமல் எனத் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு நடித்தார். பரபரப்பாக இருந்த காலக்கட்டதிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் அசின்.

’நடிகையர் திலகம்’ கீர்த்தி சுரேஷ். மலையாள குடும்பத்தில் பிறந்தவர் ஆரம்பத்தில் தனது சிரிப்புக்காகவும் இடையில் உடல் இளைத்து காணப்பட்டதற்காக என கேலிகளைச் சந்தித்து இருக்கிறார். ஆனால், இவற்றை எல்லாம் தனது திறமையான நடிப்பால் சமாளித்து கடந்து வந்தார் கீர்த்தி.

அறிமுகமான ‘பிரேமம்’ படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்த அழகி அனுபமா பரமேஸ்வரன். அதன் பிறகு தமிழில் தனுஷுடன் நடித்த ‘கொடி’ படத்தில் மாலதி கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்தார். அடுத்து ஜெயம் ரவியுடன் இவர் நடித்துள்ள ‘சைரன்’ படம் வெளியாக இருக்கிறது.

கேரள மாநிலம் கண்ணூரில் பிறந்தவர் மாளவிகா மோகனன். தமிழில் இவர் அறிமுகமாகியதே ரஜினியின் ‘பேட்ட’ படத்தில். அதன் பிறகு விஜயுடன் ‘மாஸ்டர்’, தனுஷூடன் 'மாறன்’ என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இப்போது விக்ரமுடன் ‘தங்கலான்’ படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார் மாளவிகா.

மலையாளத் திரையுலகில் இருந்து தமிழுக்கு மற்றொரு நல்வரவு ஐஸ்வர்ய லக்‌ஷ்மி. ‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலியாக அசத்தியவர், அடுத்தடுத்து தமிழ் மற்றும் மலையாளம் இரண்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

மடோனா செபாஸ்டின் 2கே கிட்ஸின் எலிசா தாஸ். ‘பிரேமம்’, ‘காதலும் கடந்து போகும்’, ‘ப பாண்டி’ என முன்பு இவர் நடித்திருந்த படங்களில் கவனம் ஈர்த்திருந்தாலும் ‘லியோ’ படத்தில் அவரது சில நிமிட கதாபாத்திரமும் காட்சிகளிலும் ரசிகர்களுக்குப் பிடித்ததாக அமைந்தது.

இவர்களில் உங்களுக்கு பிடித்த நாயகி யார்? அவர் நடித்ததில் எந்த கதாபாத்திரம் பிடிக்கும் என்பதை சொல்லுங்கள்.

Photo Gallery: மாடர்ன் உடையில் அசத்தும் பிரியங்கா மோகன்!