அந்த டாட்டூவை காணோம்... புடவையில் கலக்கும் சமந்தா!

காமதேனு

நடிகை சமந்தா தனது ‘சகி’ துணி பிராண்டிற்காகப் புதிய போட்டோஷூட் செய்து புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்து வரும் சமந்தா தற்போது சினிமாவுக்கு பிரேக் கொடுத்து பயணம், மருத்துவம், பிசினஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

சிகிச்சைக்காக நியூயார்க் சென்ற சமந்தா, தற்போது ஹைதராபாத் திரும்பியுள்ளார். சமீபத்திய போட்டோ ஷூட்டில் விலா எலும்பில் இருந்த தனது கணவரின் பெயரான நாக சைதன்யா என்ற டாட்டூவை சமந்தா நீக்கியிருந்தது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

நாக சைதன்யாவுடனான திருமணத்தின் போது சமந்தாவும் நாக சைதன்யாவும் கை மணிக்கட்டில் கப்புள் டாட்டூவை குத்தியிருந்தார்கள்.

அந்த டாட்டூவை மறைத்தபடி புடவையில் சமந்தா புதிய போட்டோ ஷூட்டை வெளியிட்டுள்ளார். “டாட்டூ நினைவுகள் எப்போதும் வலி தருபவை எனக் கூறும் சமந்தா அந்த டாட்டூவையும் தற்போது அழித்துவிட்டாரா?” என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.