Photo Gallery: சேலையில் மயக்கும் பரம சுந்தரி... அசத்தல் கிளிக்ஸ்!

காமதேனு

தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக திரைத்துறைக்குள் நுழைந்தவர் கீர்த்தி சனோன்.

தென்னிந்திய நடிகையாக அறிமுகமானாலும் தற்போது பாலிவுட்டில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பாலிவுட்டில் வெறுமனே கமர்ஷியல் நாயகியாக மட்டும் இல்லாமல் தனது திறமையான நடிப்புக்கும் பெயர் போனவர் கீர்த்தி.

கடந்த 2021-ம் ஆண்டு இவரது நடிப்பில் ‘மிமி’ என்ற படம் வெளியானது.

நடனம் ஆடுபவரான கீர்த்தி, பணத்தேவைக்காக வாடகைத்தாயாக எப்படி மாறுகிறார் என்பதுதான் ‘மிமி’ படத்தின் கதை.

இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது பெற்றார் கீர்த்தி.

இதனை அடுத்து, ‘ஆதிபுருஷ்’, ‘கணபத்’ ஆகிய படங்களில் நடித்தவர் அடுத்த வருடம் வெளியிட கைவசம் மூன்று படங்களை வைத்துள்ளார்.