பெண் சக்தி

பிறந்த குழந்தைக்கு தேன் தருவது நல்லது!: அவ(ள்) நம்பிக்கைகள்-19

டாக்டர் சசித்ரா தாமோதரன்

நம்பிக்கை :

"பிறந்த குழந்தைக்கு தேன் தருவது நல்லது.."

உண்மை :

தேன் இயற்கை உணவுதான் என்றாலும், தேனைக் காட்டிலும் சிறந்ததொரு உணவு தாய்ப்பாலாகும். ஒரு குழந்தைக்கு, அதன் தாய் மடியில் சுரக்கும் தாய்ப்பாலை மிஞ்சிய அமிர்தம் வேறெதுவும் இந்த உலகிலேயே கிடையாது. குழந்தைக்கு ஒவ்வாமை வரவே வராத தாய்ப்பாலானது தாயிடமே சுரக்கிறது. அப்படியிருக்க தேன் மட்டுமல்ல பவுடர் பால், மாட்டுப்பால் என எதுவும், முதல் 6 மாதங்களுக்குக் குழந்தைக்குத் தவிர்க்கப்பட வேண்டியவையே.

மேலும் தேன் போன்ற பதப்படுத்துதல் இன்றி வழங்கப்படும் இயற்கை உணவுகளால், Clostridium botulinum போன்ற பாக்டீரியா கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது. இதனால் குடல் அழற்சி, ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு எனத் தொடங்கி, உயிருக்கே ஆபத்தாக முடியும் பல விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. ஆகையால் முதல் 6 மாதங்களுக்கு இவற்றைத் தவிர்ப்பதே நல்லது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
SCROLL FOR NEXT