கொடி சுத்திப் பிறந்தா தாய்மாமனுக்கு ஆகாது!: அவ(ள்) நம்பிக்கைகள்-18

கொடி சுத்திப் பிறந்தா தாய்மாமனுக்கு ஆகாது!: அவ(ள்) நம்பிக்கைகள்-18

நம்பிக்கை :

"கொடி சுற்றிப் பிறந்தால் கோத்திரத்துக்கு ஆகாது.., மாலை சுற்றிப் பிறந்தால் மாமனுக்கு ஆகாது..."

உண்மை :

இப்படிப் பிரசவத்தின்போது பெரியவர்கள் கூறுவது மட்டுமல்லாமல், பிறந்த குழந்தையைப் பார்க்கவும்கூட உறவினர்கள் தயங்குவதுண்டு.

பொதுவாக தொப்புள் கொடி குழந்தை உடலின் ஏதாவது ஒரு பகுதியில் சுற்றியிருப்பதைக் கொடி சுற்றுதல் என்றும், அதுவே கழுத்தில் சுற்றியிருப்பதை மாலை சுற்றுதல் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

உண்மையில் மாலை சுற்றுதல் எனும் தொப்புள் கொடி கழுத்தை சுற்றியிருக்கும் நிலை, சாதாரணமாக இருந்தால் பிரச்சினையில்லை. ஆனால், அதுவே சற்று இறுக்கமாயிருந்தால் உண்மையில் அது அந்தக் குழந்தைக்கும், மருத்துவருக்கும்தான் ஆகாது.

தாய்க்கும் சேய்க்கும் இடையேயான பந்தமாக மட்டுமல்லாமல், பண்டமாற்று வழியாகவும் விளங்கும் தொப்புள் கொடியானது, முந்தைய பதிவில் கூறப்பட்டதுபோல, அதன் நீள மாற்றங்கள் ஏற்படும்போது, குழந்தையின் ஏதாவது ஒரு பாகத்தில் சுற்றிக் கொள்ள இயல்பாகவே வாய்ப்புள்ளது. அப்படி, தொப்புள் கொடி, குழந்தையின் கழுத்தில் சுற்றும்போது, அது இறுக்கமாக இருக்குமேயானால், பிரசவத்தின்போது குழந்தையின் துடிப்பு குறைவதற்கும் வாய்ப்புண்டு என்பதால், மருத்துவர்களுக்கு இன்னும் அதிக கவனமும் தேவைப்படுகிறது.

மாறாக, "கொடி சுற்றுதல், மாலை சுற்றுதல் கோத்திரத்துக்கு, மாமனுக்கு ஆகாது" என்பதெல்லாம் முற்றிலும் மூட நம்பிக்கையே தவிர வேறில்லை.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
கொடி சுத்திப் பிறந்தா தாய்மாமனுக்கு ஆகாது!: அவ(ள்) நம்பிக்கைகள்-18
யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் குற்றமா!? : அவ(ள்) நம்பிக்கைகள்-17

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in