சமந்தா: அன்றும் - இன்றும்
சமந்தா: அன்றும் - இன்றும் 
பெண் சக்தி

சாதித்த சமந்தா... 45 கிலோ வரை எடையை குறைத்தது எப்படி? எளிய முறையில் முன்னுதாரணமாகி இருக்கும் ஆஸி. நர்ஸ்

காமதேனு

மிகவும் எளிய நடைமுறைகளின் வாயிலாக சுமார் 45 கிலோ எடையை குறைத்ததில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த செவிலியர் ஒருவரும், அவரது அனுபவமும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

உடல் எடைக்குறைப்பு என்பது நடப்பு வாழ்க்கைச் சூழலில் பலருக்கும் சவாலாக மாறி வருகிறது. வாழ்க்கைச் சூழல், உணவூட்டம், மன அழுத்தம், உடற்பயிற்சிக்கு நேரம் இல்லாதது என இளம் வயதினர் பலரும் மிகை பருமனுக்கு ஆளாகி வருகின்றனர். அத்துடன் அழையா விருந்தாளிகளான நோய்கள் பலவற்றையும் வரவழைத்துக்கொள்கின்றனர். அவர்களின் மத்தியிலிருந்து, எடைக்குறைப்புக்கு முயன்றதில் முன்னுதாரணமாய் மாறியிருக்கிறார் சமந்தா அப்ரூ.

சமந்தா அன்று

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியை சேர்ந்த இவர் கொரோனா காலத்தில் சுமார் 45 கிலோ வரை எடையைக் குறைத்திருக்கிறார். அதிலும் மிகவும் எளிமையான உடற்பயிற்சி மற்றும் உணவூட்டத்தை பின்பற்றியே அவர் இவற்றை சாதித்திருக்கிறார். எடைக்குறைப்பு என்றாலே அச்சுறுத்தும் உடற்பயிற்சிகள் மற்றும் வாயைக்கட்டும் உணவுக்கட்டுப்பாடுகளே நடப்பில் இருப்பதன் மத்தியில், சமந்தா வித்தியாசமாக சாதித்திருக்கிறார்.

25 வயதாகும் சமந்தா 2020-ல் 110 கிலோ எடையில் இருந்தார். பொதுவெளியில் அதிகம் தலைகாட்டவே தயங்கினார். நண்பர்களுடன் விருந்து மற்றும் விழாவில் பங்கேற்பதையும் தவிர்த்தார். இதையொட்டிய மன அழுத்தம் காரணமாக அதிகமாகவும், அடிக்கடி உண்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அவரது உடல் எடை ஏறுமுகமாகவே இருந்தது. உடல் எடைக்குறைப்பு என்பது தனது வாழ்நாளில் சாத்தியமே இல்லை என்றும், அதையொட்டிய சோகமுமாக சதா இருட்டில் முடங்கிக்கிடந்தார். போதாக்குறையாக பெண்களை அச்சுறுத்தும் பிசிஓஎஸ் பிரச்சினையும், உடல் எடை காரணமாக மூட்டுவலியும் சமந்தாவுக்கு அதிகம் இருந்தது.

இந்த சூழலில் கொரோனா ஊரடங்கு காலத்தில் எவருமற்ற சாலைகளில் காலாற நடப்பதை வழக்கமாக்கினார். அங்கே தன்னை வேடிக்கை பார்க்கவோ, கேலி செய்யவோ எவரும் இல்லை என்பது அவருக்கும் மிகுந்த ஆறுதலாக இருந்தது. அப்போதுதான் நடைபயிற்சியில் தனக்கிருந்த ஆவலை கண்டுகொண்டார். உற்சாகத்துடன் அன்றாடம் 10 ஆயிரம் தப்படிகளை இலக்காகக் கொண்டார்.

கொரோனா முடிந்ததும் உடற்பயிற்சிக் கூடமும் சென்றார். வாரத்தில் 4 நாள் மட்டுமே உடற்பயிற்சி செய்வார். தினசரி உணவுமுறையில் 80:20 என்ற விதியையும் பின்பற்ற ஆரம்பித்தார். அதாவது, 80 சதவீத உணவுகளை உடல் எடைக்குறைப்புக்கான எச்சரிக்கையோடு எடுத்துக்கொள்வது. மிஞ்சிய 20 சதவீதத்தை விரும்பிய வகையில் ருசிக்காக எடுத்துக்கொள்வது.

சமந்தா இன்று

இந்த எளிய நடைமுறைகள் ஓரிரு மாதங்களில் சமந்தாவிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்தன. அவரது உடல்வாகு மாற ஆரம்பித்தது. அதுநாள் வரை கண்ணாடி பார்ப்பதையே வெறுத்து வந்த சமந்தா, அதன் பின்னர் செல்ஃபிக்களை எடுத்து குவிக்க ஆரம்பித்தார். முழுதாய் கொரோனா காலம் விடைபெற்றபோது அடியோடு ஆளே மாறியிருந்தார். 45 கிலோ வரை எடை குறைத்து சிக்கென 65 கிலோவுக்கு மாறியிருந்தார்.

சமந்தா அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. எளிய நடைப்பயிற்சி. எப்போதேனும் ஜிம்மில் உடற்பயிற்சி. உணவில் 80:20 விதி. அவ்வளவுதான். தொடர் முயற்சிகளின் விளைவாக தான் விரும்பிய உடல்வாகுக்குள் கூடு பாய்ந்திருக்கிறார். ஏனைய மிகை பருமன் அவதியாளர்களுக்கும் ஆரோக்கியமான முன்னுதாரணமாகி இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அரசில் 314 பணியிடங்கள் காலி... மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி... ஓபிஎஸ் உறுதியால் சின்னம் முடங்குமா?

பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்... 45 நாட்களுக்கு கோடை விடுமுறை!

சிஎஸ்கே அணிக்கு 'தல' தோனிக்குப் பிறகு யாரு கேப்டன்?... செயல் அதிகாரி கொடுத்த ட்விஸ்ட்!

விடிய, விடிய பேச்சுவார்த்தை... பாஜக அணியில் டி.டி.வி. தினகரனுக்கு 4, ஓபிஎஸ்சுக்கு 2 தொகுதிகள்!

SCROLL FOR NEXT