செல்போன் - ஹேக்கர் 
தொழில்நுட்பம்

சாம்சங் செல்போனை குறிவைக்கும் ஆபத்து... அரசு தரும் எச்சரிக்கையை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

காமதேனு

சாம்சங் செல்போனின் குறிப்பிட்ட மாடல்கள், ஹேக்கர்களின் தாக்குதலுக்கு எளிதில் ஆளாவதால், அவை குறித்தான பாதுகாப்பு கட்டமைப்புகளை உடனடியாக மேம்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (Indian Computer Emergency Response Team (CERT-In)), இணைய பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை அவ்வப்போது குடிமக்களுக்கு வழங்கி வருகிறது.

செல்போன் பாதுகாப்பு

அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி போன்களை பயன்படுத்துபவர்களை குறிவைத்து கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிடப்படுள்ளது. புதிதோ, பழையதோ சாம்சங் செல்போனின் கேலக்ஸி வரிசை மாடல்களை பயன்படுத்துவோர் இந்த அறிவுறுத்தல்களை உடனடியாக பின்பற்றுவது அவசியம்.

சாம்சங் தயாரிப்புகளின் கேலக்ஸி மாடல்களின் மேம்படுத்தப்படாத இயங்குதளம் கொண்ட செல்போன்கள் எளிதில் ஹேக்கர்களின் கைவரிசைக்கு ஆளாகின்றன. செல்போனின் பாதுகாப்பு கட்டமைப்புகளை கடந்து, பயனரின் தனியுரிமையை பாதிக்கும் வகையிலான தாக்குதல்களும் இவற்றில் சேரும். செல்போனில் சேகரித்து வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கி அணுகல்கள் வரை ஹேக்கர் தாக்குதல்களுக்கு ஆளாகக் கூடும்.

அதிலும் சாம்சங் செல்போனின் 11, 12, 13 மற்றும் 14 ஆகிய ஆண்ட்ராய்டு பதிப்புகள், எளிதில் இணையவெளித் தாக்குதல்களுக்கு ஆளாகின்றன. பலவீனமான இந்த பதிப்புகளால், ஹேக்கர்களால் செல்போனில் இருக்கும் சிம் கார்டின் பின் களவுபோவது, சேகரிப்பில் இருக்கும் தரவுகள் திருட்டு, தொலைவிலிருந்து செல்போனை இயக்குவது அல்லது முழுக்கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்வது ஆகியவை சாத்தியமாகக் கூடும்.

சாம்சங் செல்போன்

இவற்றைத் தவிர்க்க சாம்சங் கேலக்ஸி போன்களின் பயனர்கள் தங்கள் சாதனத்தின் இயங்குதளம் மற்றும் ஃபர்ம்வேர் போன்றவற்றை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செய்யத் தவறினால் சாம்சங் மாடல்கள் ஹேக்கர்களின் அச்சுறுத்தல்களுக்கு எளிதில் ஆளாகக் கூடும். இப்போது என்றில்லை, மொபைல் சிஸ்டம் கோரும் அப்டேட் வழிமுறைகளை அவ்வப்போது முறையாக பின்பற்றுவதும் நல்லது.

இதையும் வாசிக்கலாமே...


திமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்து விபத்து... வாகனத்தில் சென்றவர் காயம்!

ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த ஆபாச வீடியோ... டீப் ஃபேக் வீடியோக்களால் கதறும் நடிகைகள்!

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள்... பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்!

புதுவீட்டில் குடியேறிய 10 நாட்களில் தம்பதி தற்கொலை... கரூர் அருகே சோகம்!

தோனிக்கு கெளரவம்... 7ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT