மணல் குவாரி
மணல் குவாரி 
மாநிலம்

சட்டவிரோத மணல் குவாரி முறைகேடு வழக்கில் பரபரப்பு: நீர்வளத்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ஈ.டி குறி!

காமதேனு

சட்டவிரோத மணல் குவாரி முறைகேடு வழக்கில் நீர்வளத்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி முறைகேடு வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக மணல் குவாரி அதிபர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளி தமிழக அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

மணல் குவாரி

அதன் அடிப்படையில் திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர், வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியருக்கு விசாரணைக்கு ஆஜராகமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். உச்சநீதிமன்ற உத்தரவுபடி நேற்று முன்தினம் காலை சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் விசாரணைக்கு ஆஜராகினர்.

அப்போது, முறைகேடு நடந்த காலக்கட்டத்தில் உள்ள ஆவணங்களை மாவட்ட ஆட்சியர்கள் சமர்ப்பித்த நிலையில் இவர்களிடம் சுமார் 10 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில் அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். விசாரணையின் போது முறைகேடு நடந்த காலக்கட்டத்தில் தாங்கள் ஆட்சியராக இல்லை என மூன்று ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அப்போது மணல் குவாரி தொடர்பான அனைத்து ஆவணங்களையும், தற்போது மணல் குவாரி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை

மேலும் மணல் அள்ளப்படுவது தொடர்பாக தங்களின் பணி குறைந்த அளவு தான் எனவும் நீர்வளத் துறை மற்றும் கனிமவளத்துறைக்கே அதிக பணி இருப்பதாக விசாரணையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் முறைகேடு நடந்த காலக்கட்டத்தில் ஐந்து மாவட்டங்களிலும் பணியாற்றிய நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் பட்டியலை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பட்டியலின் இடம்பெற்றுள்ள இரு துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

SCROLL FOR NEXT