இங்கிலாந்து - இலங்கை போட்டி 
விளையாட்டு

இலங்கை அணி அபார வெற்றி... அரையிறுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து!

காமதேனு

நடப்பு சாம்பியன் இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இலங்கை வீரர்கள் மகிழ்ச்சி

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணி வீரர்கள், இலங்கை அணி பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் ஒரு பக்கம் சரிய அதனை ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே மறுபுறம் காப்பாற்ற முயன்றார். ஆனால், அவரது முயற்சியும் விழலுக்கு இரைத்த நீராக வீணாய் போனது.

அந்த அணி 33.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன் எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் அதிபட்சமாக 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி சார்பில் லஹிரு குமரா 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ். ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லே

157 ரன் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்து ஆடியது. அந்த 25.4 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியம் இங்கிலாந்தை வீழ்த்தியது. அந்த அணியின் நிஸங்கா 77 ரன்னும், சமரவிக்ரமா 65 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் டேவிட் வெய்லி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த தோல்வி மூலம் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து லீக் சுற்றுடன் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறுகிறது.

SCROLL FOR NEXT