ராமர் கோயில் 
அரசியல்

‘இந்தியாவின் 4 சங்கராச்சாரியார்களும், ராமர் கோயில் விழாவை புறக்கணித்திருக்கிறார்கள்’

காமதேனு

‘இந்தியாவின் 4 சங்கராச்சாரியார்களும் ராமர் கோயில் விழாவை புறக்கணித்திருக்கிறார்கள். எனில் அவர்கள் செய்வது தவறானதாகி விடுமா?’ என்று காங்கிரஸ் கட்சியின் ராமர் கோயில் விழா புறக்கணிப்பை நியாயப்படுத்தி இருக்கிறார் சிவசேனா(உத்தவ்) எம்பி-யான பிரியங்கா சதுர்வேதி.

ஜன.22 ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர், தங்களது பங்கேற்பு குறித்து விளக்கமளித்துள்ளனர். ராமர் கோயில் விழாவை பாஜக அரசியலாக்குகிற்து என்பது உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து, ராமர் கோயில் விழா புறக்கணிப்பதாக அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சோனியா, கார்கே

இது தொடர்பாக ”ராமரை நம் நாட்டில் லட்சக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நீண்ட காலமாக அயோத்தியில் ராமர் கோயில் என்ற அரசியல் திட்டத்தை உருவாக்கி வருகிறது. அதிலும் முழுமையடையாத கோயிலை திறந்து வைத்தது தேர்தல் ஆதாயம் பெறப் பார்க்கிறார்கள். 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி ஆகியோர், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்” என்று காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராமர் கோயில் விழாவுக்கான அழைப்பை காங்கிரஸ் தலைவர்கள் நிராகரித்ததை அடுத்து, அக்கட்சியை பாஜக கடுமையாக தாக்கத் தொடங்கியுள்ளது. ’காங்கிரஸ் கட்சியின் முடிவு ஆச்சரியத்துக்கு உரியது அல்ல’ என பாஜக தெரிவித்துள்ளது. “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டுகளில் காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடவுளர் ராமரின் இருப்பை மறுத்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை தாமதப்படுத்தினார்கள். எனவே, ராமர் கோயில் விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கப்போவதில்லை என்பதற்கு பெரிதாக ஆச்சரியம் கொள்ளத்தேவையில்லை” என பாஜக சாடியுள்ளது.

’இந்தியா கூட்டணி’யின் அங்கத்தினர்களான பல கட்சிகள், தங்களது ராமர் கோயில் பங்கேற்பை உறுதி செய்துள்ளன. அவர்களின் மத்தியில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் சிவசேனா(உத்தவ்) எம்பியான பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு கட்சியிக்கு வெளியிலிருந்து வந்திருக்கும் முக்கிய குரலாக இது பார்க்கப்படுகிறது.

பிரியங்கா சதுர்வேதி

“இது பக்தி சம்பந்தப்பட்ட விஷயம். இதில் நான் எந்த அரசியலும் செய்ய மாட்டேன். ஆனால் ஒரே ஒரு கேள்வி இருக்கிறது. நம் நாட்டில் நான்கு சங்கராச்சாரிகள் உள்ளனர்; அவர்களும் விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். அப்படியெனில் அவர்கள் எடுத்த முடிவு மிகவும் தவறானதா?” என்று பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


பரபரப்பு... எழும்பூரில் திடீரென தடம் புரண்ட ரயில் எஞ்சின்!

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள்... 100க்கும் மேற்பட்டோர் கைது!

12 அடி உயரம்... 8 அடி அகலம்... அயோத்தி ராமர் கோயிலில் 42 கதவுகள் தங்கத்தில் பொருத்தம்!

உடனே முந்துங்க... நாளை முதல் நெல்லை வரை பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு... முன்பதிவு துவக்கம்!

மயங்கி விழுந்த பேருந்து ஓட்டுநர்... ஓய்வு பெற்ற ஊழியர்கள் தாக்கியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT