பிரேமலதா விஜயகாந்துடன் தமிழிசை சவுந்தரராஜன்
பிரேமலதா விஜயகாந்துடன் தமிழிசை சவுந்தரராஜன் 
அரசியல்

வாக்காளராக பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தது மகிழ்ச்சி... தமிழிசை தடாலடி ஸ்டேட்மென்ட்!

காமதேனு

சென்னை சாலிகிராமம் வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த பிரேமலதா விஜயகாந்த், அங்கு பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பட்டதால் அவருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், நடிகர்கள், பிரபலங்கள் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது மகன்கள் சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோரோடு சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருகை தந்தார்.

நீண்ட வரிசையில் பொதுமக்களுடன் காத்திருந்து, மூவரும் தங்களது வாக்குகளை செலுத்தினர். இதைத் தொடர்ந்து மூவரும் வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வந்த போது, அங்கு தென் சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் எதிரில் வந்தார். அவரை கண்டவுடன் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

பிரேமலதா விஜயகாந்துடன் தமிழிசை செளந்தர்ராஜன்

அப்போது தமிழிசை சவுந்தரராஜன், “வேட்பாளராக அல்லாமல் வாக்காளராக பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தது மகிழ்ச்சி” என தெரிவித்ததால் அங்கிருந்த பாஜக , தேமுதிக தொண்டர்கள் மத்தியில் சிரிப்பாலை எழுந்தது.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT