உத்தராகண்ட் பார்வதி குந்த் குளத்தில் பிரதமர் மோடி பூஜை 
அரசியல்

மனமுருக வேண்டிய பிரதமர் மோடி- உத்தராகண்ட் பார்வதி குந்த் குளத்தில் சிறப்பு பூஜை

காமதேனு

ஒரு நாள் பயணமாக உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பித்தோராகர் பகுதியில் உள்ள பார்வதி குந்த் குளத்தில் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.

ஒரு நாள் பயணமாக நரேந்திர மோடி உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு கஞ்சி கிராமத்தில், உள்ளூர் பொதுமக்களை சந்திக்கும் அவர், அங்கு அமைக்கப்பட்டுள்ள கலை மற்றும் கைவினை கண்காட்சியை பார்வையிட உள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய ராணுவம், இந்தோ திபெத்தியன் எல்லைப்படை மற்றும் எல்லை சாலைகள் அமைப்பு ஆகியோருடன் அவர் கலந்துரையாட இருக்கிறார். இதைத் தொடர்ந்து அல்மோரா மாவட்டத்தின் ஜெகதீஸ்வர் பகுதிக்கு செல்லும் அவர், ஜெகதீஸ்வர் கோயிலில் பூஜைகள் செய்ய உள்ளார். 6200 அடி உயரத்தில் 224 கல் கோயில்கள் அடங்கியது ஜெகதீஸ்வர் கோயில் ஆகும்.

பிரதமர் மோடி பூஜை

மேலும் உத்தராகண்ட் மாநிலத்தில் ரூ.4,200 கோடி மதிப்புள்ள மேம்பாட்டு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். சாலை, மின்சாரம், குடிநீர், நீர் பாசனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது. மேலும் மலர் மற்றும் காய்கறி சாகுபடியை அதிகரிக்கும் வகையில் 21,398 பிளாஸ்டிக் உற்பத்தி மையங்கள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்க உள்ளார்.

இயற்கை பேரிடர்கள் அதிகம் நடைபெறும் உத்தராகண்ட் மாநிலத்தில், சாலை மேம்பாடு, அவசரகால திட்டங்கள், உள்ளூர் கல்வி மேம்பாடு, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இந்த பயணத்தின் போது பிரதமர் திட்டங்களை தொடங்கி வைப்பார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் பார்வதி குந்த் குளத்தில் பிரதமர் மோடி பூஜை
SCROLL FOR NEXT