கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம் 
அரசியல்

பதறவைக்கும் பணப்பட்டுவாடா... கோவை ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்!

காமதேனு

கோவை மக்களை தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மக்களவைத் தொகுதியில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு வாக்களிக்க பணப்பட்டுவாடா செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பறக்கும் படையினர்

நேற்று மாலை கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்களை பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பிடித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் ஒப்படைத்து இருந்தனர். பிடிபட்ட நபர், திமுக வேட்பாளருக்காக பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக புகார் அளித்துள்ள நிலையில், அது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பல்வேறு இடங்களிலும் பணப்பட்டுவாடாவிற்கு நூதன முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் இன்று வருகை தந்தனர். அப்போது பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அவர்கள் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கொண்டு செல்லும் பணத்தை மட்டுமே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடிப்பதாகவும், பணப்பட்டுவாடா செய்பவர்களிடமிருந்து பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படுவதில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

 சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

SCROLL FOR NEXT