பிரதமர் மோடியுடன் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா. 
அரசியல்

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கு... பிரதமர் மோடிக்கு சித்தராமையா மீண்டும் கடிதம்!

கவிதா குமார்

ஆபாச வீடியோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும், இவ்விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகம் தலையிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பியாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா உள்ளார். மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அவரின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறியது.

பிரஜ்வல் ரேவண்ணா

இதனை விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஏற்கெனவே 5 முறை அவருக்கு சிறப்பு புலனாய்வு குழு(எஸ்ஐடி) சம்மன் அனுப்பியது. ஆனால், அதற்கு அவர் முறைப்படி எந்த பதிலும் அளிக்கவில்லை. அத்துடன் விசாரணைக்கும் ஆஜராகவில்லை.

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கு

இதனால் அவர் எங்கிருகிறார் என்பதைக் கண்டறிய ஏற்கெனவே ப்ளூகார்னர் நோட்டீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது பாஸ்போட்டை முடக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழு கடிதமும் எழுதியுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், வெளிநாட்டில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் அனைத்து சட்ட வழிகளிலும் ஒத்துழைக்க எஸ்ஐடி தயாராக உள்ளது. எனவே, இதில் தலையிட வெளியுறவுத்துறைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்.

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா

மேலும், வெளியுறவு அமைச்சகம் மூலம் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச போலீஸ் ஏஜென்சி மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் எழுதியுள்ளார்.

மே முதல் வாரத்தில் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பிரஜ்வல்லின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று சித்தராமையா கோரியிருந்தார். ஆனால், இந்தக் கடிதத்துக்கு இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு அவர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்... மிகக் கனமழை கொட்டும் என அறிவிப்பு!

அதிர்ச்சி... பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்... பதற்றத்தில் என்ஐஏ அலுவலகம்... தீவிர விசாரணை!

சவுக்கு சங்கரை விடாதீங்க... கள்ளக்குறிச்சி மாணவி தாய் போலீஸில் பரபரப்பு புகார்!

வடமாநிலங்களில் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள்... கங்கை, யமுனை கரைகளில் குவிந்த மக்கள்!

பிரியாவிடை பெற்றார் தினேஷ் கார்த்திக்... வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT