கனலரசன் 
அரசியல்

அதிமுகவுக்கு காடுவெட்டி குருவின் மகன் ஆதரவு... அதிர்ச்சியில் பாமக!

காமதேனு

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கே தங்கள் ஆதரவு என்று மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் தெரிவித்துள்ளார்.

காடுவெட்டி குரு

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியதால் அந்தக் கட்சி அதிமுக கூட்டணியில் இருக்கும் என்று நம்பப்பட்ட நிலையில், அது திடீரென பாஜக கூட்டணியில் இணைந்தது. இந்த நிலையில் வன்னியர்கள் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்காது என கருதப்பட்டது.

இந்தவேலையில் வன்னியர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவை பெற்ற முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை நடத்திவரும் அவர்  தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை தெரிவித்துள்ளார். 

கனலரசன்

இதுகுறித்துப் பேசிய கனலரசன், “'நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மாவீரன் மஞ்சள் படையின் நிலைப்பாடு குறித்து எனது தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் நலன் கருதியும் வன்னிய சமூகத்தின் வளர்ச்சி கருதியும் சென்ற சட்டமன்றத் தேர்தலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கிய மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மாவீரன் மஞ்சள் படைத் தொண்டர்களும் காடுவெட்டியார் அவர்களின் தீவிர விசுவாசிகளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கி தேர்தல் பணியாற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என  அவர் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கும் நிலையில், காடுவெட்டி குருவின் மகன் அதிமுகவுக்கு ஆதரவளித்துள்ளது பாமகவுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

SCROLL FOR NEXT