இரா. முத்தரசன் 
அரசியல்

மக்களை திசை திருப்பவே சிஏஏ அமல்... இரா.முத்தரசன் தாக்கு!

காமதேனு

தேர்தல் பத்திர விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்ப வேண்டும் என்பதற்காக அவசரம் அவசரமாக மத்திய அரசு சிஏஏ-வை அமல்படுத்தி இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.

பின்னர் அறிவாலய வாசலில் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், “நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையில் தான் இந்தியா கூட்டணி உருவானது. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை என்ற பாஜக-வின் வாக்குறுதி என்னவாயிற்று? பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம்

தேர்தல் பத்திர விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்ப வேண்டும் என்பதற்காக அவசரம் அவசரமாக மத்திய அரசு சிஏஏ-வை அமல்படுத்தியுள்ளது. இது மக்களை பிளவுப்படுத்தக்கூடிய செயல். நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்ககூடிய செயல். மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த அரசியல் ஆதாயம் தேடும் குறுகிய நோக்கத்தோடு பாஜக செயல்படுகிறது.

இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் திமுகவிற்கு பெரும் பங்கு உள்ளது. திமுக கூட்டணியில் விரிசல் வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், எந்த பிரச்சினையும் இன்றி தொகுதி உடன்பாடு முடிந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை, திருப்பூர் என கடந்த தேர்தலில் நாங்கள் போட்டியிட்டு வென்ற தொகுதிகளில் மீண்டும் போட்டியிட உள்ளோம். வேட்பாளர்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

சிஏஏ அமல்; பாஜகவையும் அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

உளவுத்துறை சொன்ன தகவல்... அண்ணாமலை, அன்புமணிக்கு குறிவைக்கும் திமுக!

கேரளாவில் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப் படாது: அதிரடியாக அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்!

சரசரவென சரிந்த எஸ்பிஐ பங்குகள்... உச்சநீதிமன்ற உத்தரவால் கடும் வீழ்ச்சி!

பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம்... பாஜகவினர் ஏமாற்றம்!

SCROLL FOR NEXT