கார்த்தி சிதம்பரம் 
அரசியல்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்... கார்த்தி சிதம்பரம் ஆவேசம்!

காமதேனு

"மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்துவர்களுக்கு பொருளாதாரமும், ஏழை எளிய மக்களின் கஷ்டமும் தெரியாது" என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் அடைந்தவர்கள்

தமிழ்நாடு அரசு சார்பில் மாதந்தோறும் தகுதியுடைய பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை, பெண்களுக்கு போடும் பிச்சை என்று பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு பேசியது சர்ச்சையானது. தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் குஷ்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தத் தேர்தலில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. சமீபத்தில் கூட வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை குறித்து கிண்டலாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கார்த்தி சிதம்பரம்

இந்நிலையில், இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிறந்த பொருளாதார யுக்தி என்று சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பாராட்டியுள்ளார். சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், "திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம், என்னைப் பொறுத்தவரையில் நல்ல பொருளாதார யுக்தி. இந்த திட்டத்தை பலர் கொச்சைப் படுத்துகிறார்கள். மேல்தட்டில் இருந்துக் கொண்டு இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தும் அவர்களுக்கு, ஆயிரம் ரூபாயின் அருமையும், ஏழைகளின் கஷ்டமும் தெரியாது. முக்கியமாக அவர்களுக்கு எந்த பொருளாதாரமும் தெரியாது.

தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவதுபோல, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தால் உள்ளூர் பொருளாதாரம்தான் வளருகிறது. இந்த பணத்தை வைத்து மும்பைக்கு சென்று பங்கு வாங்கவோ, டெல்லி, லண்டன் சென்று செலவு செய்யவோ போவதில்லை. வீட்டைச் சுற்றியுள்ள கடைகளில்தான் செலவாகும். அதனால், இந்த திட்டத்தை கொச்சைப்படுத்துவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

SCROLL FOR NEXT