அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் 
செய்திகள்

மோடி 3.0: அமெரிக்கா சார்பில் பதவியேற்பு விழாவுக்கு வருகிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்

வ.வைரப்பெருமாள்

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக, அமெரிக்கா சார்பில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்தியா வர உள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார் நரேந்திர மோடி. இந்த வரலாற்று நிகழ்வுக்கு உலகத் தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க அமெரிக்கா சார்பில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்தியாவுக்கு வர உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மத்தியில் ஆட்சி அமைக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து மீண்டும் நாட்டின் உயரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது பதவியேற்பு விழாவில் ஜேக் சல்லிவன் பங்கேற்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியப் பொதுத் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்றதற்காக அவருக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்திய பொதுத் தேர்தலில் வாக்களித்த 65 கோடி மக்களுக்கும் அதிபர் பைடன் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி

அமெரிக்கா - இந்தியாவின் விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும், சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்திய பொதுப் பார்வையை முன்னேற்றுவதற்கும் இரு தலைவர்களும் தங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்தினர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேக் சல்லிவனின் வருகை உறுதிப்படுத்தப்பட்டாலும், அவரது இந்திய பயண தேதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை. பிரதமர் மோடி பதவியேற்பு வரும் சனிக்கிழமை (ஜூன் 8) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!

டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!

மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!

வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

SCROLL FOR NEXT