அமைச்சர் விழாவில் யாசகம் கேட்ட பெண் ஆசிரியர் 
செய்திகள்

மாநாட்டில் பரபரப்பு... அமைச்சரிடம் மடியேந்தி யாசகம் கேட்ட ஆசிரியை!

காமதேனு

சென்னையில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டார். அப்போது ஆசிரியை ஒருவர் அமைச்சரிடம் திடீரென மடியேந்தி யாசகம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிரியர் மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழகத்தில் இனி வரும் காலங்களில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு மாநில முன்னுரிமை அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை வரவேற்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நேற்று சென்னை ராயப்பேட்டை, ஒய்எம்சிஏ மைதானத்தில் அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டார்.

மடியேந்தி யாசகம் கேட்ட ஆசிரியை

அப்போது, மாநாட்டில் பங்கேற்ற தொழிற்கல்வி ஆசிரியை ஒருவர் திடீரென அமைச்சர் அன்பில் மகேஸிடம் மடியேந்தி யாசகம் கேட்டார். ஆசிரியர் பணிக்கான அரசாணை தனக்கு வழங்கப்படவில்லை என்பதால் இவ்வாறு அவர் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், அவரை மாநாட்டுக் கூடத்திலிருந்து வெளியேற்ற முயன்றனர். அப்போது, அந்த பெண் தனது கோரிக்கை தொடர்பாக அமைச்சரைச் சந்தித்து விட்டுச் செல்வதாகக் கூறினார். அதற்கு, காவல் துறையினர் நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சரைப் பார்க்க அனுமதிப்பதாகக் கூறி ஓரமாக நிற்க வைத்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முன்பு ஆசிரியை ஒருவர் மடியேந்தி யாசகம் கேட்ட சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

SCROLL FOR NEXT