கல்வி வளாகத்தில் சாட்ஜிபிடி 
செய்திகள்

கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களுக்கு என பிரத்யேக சாட்ஜிபிடி - ஓபன்ஏஐ வெற்றிகரம்!

எஸ்.எஸ்.லெனின்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களுக்கு என பிரத்யேக சாட்ஜிபிடி வசதியை ஓபன்ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

உலகில் கணினி மயம் அறிமுகமான காலத்துக்கு இணையான புதிய பாய்ச்சலை சாட்ஜிபிடி உருவாக்கி வருகிறது. ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடியின் அடுத்தடுத்த பதிப்புகள் இந்த வகையில், பலதரப்பட்டோரையும் கவர்ந்து வருகின்றன. இவற்றில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்கள் முன்னிலை வகிக்கின்றன. எனவே அவற்றுக்கு என தனிப்பயனாக்கப்பட்ட ’சாட்ஜிபிடி கல்வி’ பதிப்பை ’ChatGPT Edu’ என்ற பெயரில் ஓபன்ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஏஐ

சமகாலத்தில் சகலத்திலும் செயற்கை நுண்ணறிவு என்பதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன் நடைமுறை பயன்பாடுகளில் சாட்ஜிபி-4ஓ மாதிரி அதன் பயனர்களை வியக்க வைத்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாக பயன்பாடுகளுக்கு என ’சாட்ஜிபிடி கல்வி’ என்ற தனிப்பயனாக்கப்பட்ட பதிப்பு பல்வேறு முன்னணி பல்கலைக்கழகங்கள் முன்னோட்டம் விடப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் ஸ்கூல், டெக்ஸாஸ் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்கள் இந்த வரிசையில் சேரும்.

இந்த பரிசீலனைகளில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஒரு கேம்-சேஞ்சர் எனவும் ChatGPT Edu அடையாளம் காணப்பட்டுள்ளது. இது மேம்பட்ட ஏஐ உபகரணங்களை அணுகக்கூடியதாகவும், தனிப்பயனாக்கப்பட்ட கற்றல், திறன்மிகுந்த ஆராய்ச்சி மற்றும் நெறிப்படுத்தப்பட்ட வளாக செயல்பாடுகளுக்கு புதிய கதவுகளைத் திறப்பதாகவும் வரவேற்பு பெற்றுள்ளது. இது கற்றல் அனுபவத்தை மேம்படுத்தவும், எதிர்காலத்திற்கு மாணவர்களை சிறப்பாக தயார் செய்யவும் கல்வி நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கும் என்றும் பல்கலைக்கழகங்கள் வரவேற்று வருகின்றன.

சாட்ஜிபிடி

பிரத்யேக கற்றல், ஆராய்ச்சிகளுக்கு அனுசரணை, மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் ஒத்தாசை என செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் ஏற்கனவே வெற்றிகரமாக வரவேற்பு பெற்றுள்ளன. இந்த வரிசையில் ChatGPT Edu இணைந்துள்ளது. வழக்கமான ChatGPT-லிருந்து ChatGPT Edu பலவகையிலும் வேறுபட்டிருக்கும். ஆசிரியர், மாணவர் அல்லது ஆராய்ச்சியாளர் என சாட்ஜிபிடியை கையாளுவோரைப் பொறுத்தும் அது மாற்றம் பெறும்.

மேலும் தரவுகளுக்கும் தனியுரிமைக்கும் பாதுகாப்பு தருவதோடு, நிர்வாக பயன்பாடு, அனுமதி ஆகியவற்றிலும் தனிப்பயனாக்கப்பட்ட வசதிகளை கல்லூரிகளுக்கான சாடிஜிபிடி பதிப்பு கொண்டிருக்கும். தற்போதைக்கு உலகின் சுமார் 50 மொழிகளில் இயங்குமாறு ChatGPT Edu வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வேளாங்கண்ணி மாதாவிற்கு தங்ககிரீடம் அணியும் நிகழ்ச்சி... மனமுருக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை!

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ

சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு விமான நிலையத்தில் தட்டித் தூக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா... அதிரடி காட்டிய எஸ்ஐடி!

வரலாறு காணாத வெப்பம்... 19 பேர் சாவு: மருத்துவமனையில் 40 பேர் அனுமதி!

SCROLL FOR NEXT